சுகாதார நடைமுறைகளுக்கு அமைய நத்தர் விழாவை கொண்டாடுங்கள் - யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் மக்களிடம் கோரிக்கை - Yarl Voice சுகாதார நடைமுறைகளுக்கு அமைய நத்தர் விழாவை கொண்டாடுங்கள் - யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் மக்களிடம் கோரிக்கை - Yarl Voice

சுகாதார நடைமுறைகளுக்கு அமைய நத்தர் விழாவை கொண்டாடுங்கள் - யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் மக்களிடம் கோரிக்கை





ஆடம்பரங்களை தவிர்த்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நத்தார் விழாவினை கொண்டாடுவோம் என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வருட நத்தார் தினம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வருட கிறிஸ்துவின் பிறப்பு விழாவை இந்த உலகத்திலே சூழ்ந்தி ருக்கின்ற இந்த பயங்கர தொற்று வியாதியின் மத்தியிலே மக்கள்  அழைக்கப்படுகின்றனர்

முதலில் இப்படியான அழைப்புக்காக நாங்கள் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் இப்படியான ஒரு கட்டத்தில் எவ்வாறு நாம் கிறிஸ்துவினுடைய பிறப்பு விழாவை கொண்டாட வேண்டும் என இறைவன் எங்களுக்கு அறிவுறுத்தி யிருக்கின்றார்

 இப்படியான  காலத்தில்தான் ஆண்டவருடைய  பிரசன்னம்  அவருடைய வல்லமையை எல்லா மக்களும் அறிந்துகொள்ளும் விதமாக நாங்கள் எங்களுடைய திரு நாட்களை கொண்டாட வேண்டும் 

உதாரணமாக வழமையாக  எத்தனையோ ஆடம்பரங்களுடனும் எத்தனையோ விதமான  களியாட்டத்துடனும்  நத்தார் விழாவை கொண்டாடுவது வழக்கம்ஆனால்  இவ் வருடம் அப்படியான ஆடம்பரங்களோடு செய்ய முடியாவிட்டாலும் அவற்றிலே நாங்கள் பயன்படுத்துகின்ற பல்வேறுவிதமான தேவையில்லாத செலவுகளை ஆடம்பரங்களை எல்லாவற்றையும் தவிர்த்து அவற்றை இந்த வருடத்தில் நாங்கள் பயனுள்ள விதத்தில் பயன்படுத்தி கொண்டாடுமாறு இறைவன் எங்களுக்கு அழைப்பு விடுக்கின்றார் 

குறிப்பாக இந்த காலத்தில் பல்வேறு தேவைகளோடு வாழ்கின்ற மக்கள் ஏழை எளியவர்களுக்கு  நாங்கள் இரக்கம் காட்டி பல்வேறு வழிகளில் எங்களுடைய பணங்களை விரயம் செய்யாது அவற்றையெல்லாம் தொகுத்து அவற்றை பயனுள்ள விதத்தில் மக்கள் வாழ்வு பெறும் பொருட்டு அவற்றை நாங்கள் பயன்படுத்தி இல்லாதவர்களோடு பகிர்ந்து கொண்டு வாழ்வதற்கு இந்த வருட கிறிஸ்துமஸ் விழா எங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது 


அது மட்டுமல்லாது நம்பிக்கை இழந்து வாழுகின்ற மக்களுக்கு நாங்கள் நம்பிக்கையினை கொடுக்கின்ற விழாவாக இந்த கிறிஸ்மஸ் விழாவினை கொண்டாட வேண்டும் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஆண்டவர் பிரசன்னமாகி இருந்து அவர்களை வழி நடத்துகின்றார் என்ற உண்மையை எங்களுடைய வாழ்விலே நாங்கள் சொல்லி எல்லோருடைய வாழ்விலும் இருக்கின்ற தீமைகளை ஆண்டவர் நிச்சயமாக அகற்றுவார் என்ற நம்பிக்கை ஒளியை எல்லாருக்கும் கொடுக்கின்ற விதத்தில் நாங்கள் நடந்து கொள்ள வேண்டும் 


குறிப்பாக இந்த காலத்தில் எங்களுக்கு கொடுக்கப்படுகின்ற ச நடைமுறைகள், கட்டுப்பாடுகள்,சுகாதாரத்தை பேணுவதற்காக எங்களுக்கு தரப்படுகின்ற வழிமுறைகளை பின்பற்றி அவற்றுக்கு மதிப்பளித்து  தரப்படுகின்ற அறிவுறுத்தல்களை நீங்கள் புறக்கணிக்காது அவற்றை நாங்கள் நன்மனதோடு ஏற்றுக்கொண்டு அசௌகரியங்கள் இருந்தாலும் அவற்றை நாங்கள் நிறை மனதோடு ஏற்றுக் கொண்டு விரும்பிய வகையில் எமது காரியங்களை செய்யா முடியாவிட்டாலும் அவற்றை நாங்கள் ஒரு நம்பிக்கையான மனதோடு பெற்றுக்கொண்டு இந்த விழாவை கொண்டாடுவோம் 

அதுவே உண்மையாக ஆண்டவருக்கு உகந்த ஆண்டாக அமையும் எனவே இந்த கிறிஸ்துமஸ் விழாவை அர்த்தமுள்ள விழாவாக இந்த காலத்திற்குரியவாறு  பொதுமக்கள் கொண்டாட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்

0/Post a Comment/Comments

Previous Post Next Post