ஒரு லட்சம் வேலை வாய்ப்பிலும் இனப் பாகுபாடு - நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றச்சாட்டு - Yarl Voice ஒரு லட்சம் வேலை வாய்ப்பிலும் இனப் பாகுபாடு - நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றச்சாட்டு - Yarl Voice

ஒரு லட்சம் வேலை வாய்ப்பிலும் இனப் பாகுபாடு - நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றச்சாட்டு





ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பில் தமிழ் இளைஞர்கள் வேண்டுமென்றே இன ரீதியில் பழி வாங்கப்பட்டுள்ளமை மிகத் தெளிவாக தெரிவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்  தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஒரு லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பில் முதல் கட்டமாக 34 ஆயிரம் பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது.  இதில் வேண்டுமென்றே இன ரீதியில் தமிழ் இளைஞர்கள் பழிவாங்கப்பட்டுகின்றனர் என்பதனை அப்போதும் சுட்டிக் காட்டினேன். 

அதனை உதாரணத்துடன் குறிப்பிட்டேன் அதாவது ஒரு லட்சத்து 40 ஆயிரம் மக்கள் வாழும் கிளிநொச்சி மாவட்டத்தில் 12 இளைஞர்களிற்கு மட்டும் நியமனம் வழங்கும் அரசு முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலி ஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 10 ஆயிரம் மக்கள்கூட இல்லாத போதும் அவர்கள் அனைவருமே சிங்கள மக்கள் என்ற அடிப்படையில் அந்த பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் 18 பேருக்கு நியமனம் வழங்கியது.

இதேபோன்று 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெறும்  92 இளைஞர்களிற்கு மட்டுமே நியமனம் வழங்கப்பட்டது.  அரசு 2 லட்சம் மக்கள் வாழும் வவுனியா மாவட்டத்தில் 112 பேருக்கு நியமனம் வழங்குகின்றதே என்பது தொடர்பில் அன்று  ஆராய்ந்தபோது அங்கும் அதிர்ச்சியே காத்திருந்த்து. அதாவது அந்த மாவட்டத்தில்  வெறும் 15 ஆயிரம் மக்கள் வாழும் சிங்கள பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து 18 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது.

நாட்டில் 20வது திருத்தச் சட்டம் நிறைவேற்றினால் நிச்சயமாக இனப் பாகுபாடு அதிகரிக்கும் எனக் குறிப்பிட்டோம் . அதன்படி  அரசு அதனையே செயலில் காட்டுகின்றது.
இதேநேரம் ஆளும் கட்சிக்கு வக்காளத்து வாங்கிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இந்த வேலை வாய்ப்பினை பெற்றுத் தருவதாக போலி வாக்குறுதிகளை வழங்கிய சமயம் அதனை நம்பியே எமது இளைஞர்கள் இவர்களிற்கு வாக்களித்தனர். அதனை தேசியத்திற்கு எதிரான வாக்குகளாக இந்த அரசு காட்ட முயன்றபோதும் எமது இளைஞர்கள் தமக்கான வேலைவாய்ப்பை எதிர்பார்த்து நின்றனர். இறுதியில் அதுவும் வழங்காது அரச அடிவருடிகள் தமது வழமையான செயலை நிறைவேற்றி அரச விசுவாசத்தை காண்பிக்கின்றனர்.

ஒரு லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பின் 2ம் கட்டம் தயார் செய்யப்படுகின்றது. இதிலே கிளிநொச்சி மாவட்டத்திற்கு பரிசீலணைக்காக வெறுமனே 35  படிவங்களே அனுப்பி வைக்கப்பண்டுள்ளது. அவ்வாறானால் இந்த முறையும் இதற்கும் குறைந்ந எண்ணிக்கையானோருக்கே நியமனம் கிடைக்கவுள்ளது. 
யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 235, வவுனியா- 374 ஆகிய விண்ணப்பங்களும் மன்னார் மாவட்டத்திற்கு  -115, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு -103 விண்ணப்ப படிவங்களுமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 103 வழங்கப்பட்டுள்ளதே அந்த மக்களில் அரசிற்கு அக்கறை ஏற்பட்டுள்ளதா எனத் தேடினால் இம் முறையும் அதிர்ச்சி காத்திருக்கின்றது. அதாவது இந்த 103 பேரில் 10 மக்கள் வாழும் வெலி ஓயாவிற்கு மட்டும் 45 பேரிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 25 ஆயிரம் மக்கள் வாழும் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு 58 மட்டுமே நியமனம் கிடைக்கும் அதே நேரம் 10 ஆயிரம் பேருக்கு 45 என்றால் வெளிப்படையான இன ரீதியிலான பாகுபாடு இல்லையா. என்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post