யாழ். மாவட்டத்தில் நேற்று இரவு தொடக்கம் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
குறிப்பாக நல்லூர் கந்தன் ஆலயத்தின் பின் பக்க வீதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
நல்லூர் ஆலயத்தை சுத்தியும் நல்லை ஆதீனத்தைச் சூழவும் வெள்ளம் தேங்கிக் கிடக்கின்ற தால் ஆலயத்திற்கு செல்பவர்களும் குறித்த வீதியால் பயணம் செய்பவர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மாவட்டத்தில் புரவி புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில நேற்றைய தினம் தொடர்ச்சியாக பெய்த மழையால்
மீண்டும் மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
குறிப்பாக யாழ். நகரம் உட்பட தாழ்நிலப் பகுதிகளில் மீண்டும் வெல்லம் புகுந்துள்ள நிலையில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேரம் வீதிகளிலும் பிறந்திருப்பதால் வீதிகளில் பயணம் செய்யும் இவர்களும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
Post a Comment