வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் அச்செழு அம்மன் வீதியைப் புனரமைப்பதற்கான வீதி அபிவிருத்தி அதிகார அனுமதி வழங்கவேண்டுமாயின் வீதி அபிவிருத்தி அதிகார சபை தங்கள் தவறுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என சபையில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு (23) நடைபெற்றது. இவ் அமர்வில் தவிசாளர் தியாகராஜா நிரோஷினால் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அச்செழு அம்மன் வீதி விடயம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சபையில் அமளிதுமளி ஏற்பட்டது.
குறி;த்த பிரேரணையின் மீது உரை நிகழ்த்த அனுமதிக்கப்பட்டது. சுதந்திரக் கட்சி தவிர்ந்த பிரதேச சபையினைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர்கள் சபையில் சபை அதிகாரம் மீறப்பட்டமை, தவிசாளர் அரசியல் பழிவாங்கலாக குற்றச்சாட்டுக்குள்ளாக்கப்பட்
இங்கு இடம்பெற்ற முறைகோடுகளுக்காக வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறுப்புச் சொல்ல வேண்டும். தவறுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறான நிலையிலேயே இவ்விடயத்திற்கு ஆதரவைத்தருவோம் என சபையில் ஒருமித்து கருத்துக்களை முன்வைத்தனர். இவ்விடயத்தில் சபையில் இருந்த சுதந்திரக்கட்சி உறுப்பினர் அப்படியாயின் நாங்கள் வேறு வீதியைப் புனரமைக்கின்றோம் எனத் தெரிவித்ததையடுத்து அவ் உறுப்பினரை நோக்கி கேள்விக்கணைகளை தொடுக்க முயற்சித்தனர். இதனால் அவையில் முறுகல் நிலைமையும் ஏற்பட்டது. தவிசாளரினால் அமைதியைக் கடைப்பிடிக்குமாறு வற்புறுத்தப்பட்டது.
உறுப்பினர்களின் உரைகளை அடுத்து வீதிதொடர்பில் பிரதேச சபையின் ஆமோதிப்பு இன்றி சபைக்குச் சொந்தமான வீதிக்கு அடிக்கல்லினை நாட்டியமை , காட்சிப்படுத்தப்பட்ட பதாகையை தவிசாளர் அகற்றியமைக்கு எதிராக தவிசாளருக்கு நெருக்கடிகளைப் பிரயோகித்தமை போன்ற விடயத்திற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை தமது வருத்தத்தினைத் தெரிவிக்கும் பட்சத்திலேயே குறித்த வீதிப்புனரமைப்பு கோரிக்கையினை ஆராய முடியும் என்பது ஏற்றுக்கொள்ளப்படுகின்றது எனத் தவிசாளரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அடுத்த விடயம் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதேவேளை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ஏற்கனவே கோரப்பட்ட நான்கு வீதிகளுக்கான புனரமைப்புக் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு அனுமதி வழங்க ஏகமனதாகத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
Post a Comment