தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷை கைதுசெய்வதற்கு பொலிஸார் பிரதேச சபை அலுவலகத்தில் காத்திருந்தும் தவாசாளர் சபைக்கு வருகைதராததால் பொலிஸார் திரும்பி சென்றுள்ளனர்.
கடந்த வாரம் புத்தூர் பகுதியில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான பெயர் பலகையினை பிரதேச சபை அகற்றியமைக்கு எதிராக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதியப்பட்டதற்கிணங்க,
நேற்று முன்தினம் தவிசாளரிடம் அச்சுவேலி பொலிஸார் வாக்குமூலம் பெற்றிருந்த நிலையில் இன்று அவரை கைது செய்வதற்காக பொலீசார் பிரதேச சபை அலுவலகத்தில் பல மணி நேரமாக காத்திருந்தனர்.
குறித்த செய்தியினை அறித்த வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஜானம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான எஸ்.சுகிர்தன், பா.கஜதீபன் மற்றும் யாழ்.மாட்டத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சிமன்ற தவிசாளர்கள் பிரதேச சபைக்கு வருகைதந்திருந்தனர்.
Post a Comment