சித்ரா நடித்த சீரியல் இந்தியில் ரீமேக் ஆகிறது - Yarl Voice சித்ரா நடித்த சீரியல் இந்தியில் ரீமேக் ஆகிறது - Yarl Voice

சித்ரா நடித்த சீரியல் இந்தியில் ரீமேக் ஆகிறது


தமிழில் சித்ரா நடித்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியல் இந்தியில் பாண்டியா ஸ்டோர் என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.

சின்னத்திரை தொடர்களில் மிகவும் பிரபலமானது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். இது 4 அண்ணன் தம்பிகள் பற்றிய கதை ஆகும். மளிகைக்கடை வைத்திருக்கும் மூத்த அண்ணன்இ அவரது 3 தம்பிகள் ஆகியோரை சுற்றியே கதை வடிவமைக்கப்பட்டிருக்கும். கூட்டுக்குடும்ப வாழ்க்கைஇ அண்ணன் தம்பி பாசம் ஆகியவை இத்தொடரில் இடம்பெற்று உள்ளதால் ரசிகர்களிடம் பேராதரவை பெற்று ஹிட்டானது. 

சுஜிதாஇ ஸ்டாலின்இ குமரன்இ வெங்கட் என இந்தத் தொடரில் நடித்தவர்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. குறிப்பாக இதில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ராவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். இத்தொடர் மூலம் ஏராளமான பெண் ரசிகைகளை மட்டுமின்றிஇ நடுத்தர வயது ஆண்களையும் சித்ரா கவர்ந்திருந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சித்ரா கடந்த 9-ந் தேதி நட்சத்திர ஓட்டலில் தற்கொலை செய்துகொண்டார். இதனால் அத்தொடரில் அவருக்கு பதிலாக காவியா என்பவர் தற்போது முல்லையாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் இத்தொடரை இந்தியில் பாண்டியா ஸ்டோர் என்ற பெயரில்  ரீமேக் செய்துள்ளனர். இந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளில் பிரபலமான சீரியல்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு உள்ளன. இருப்பினும் தமிழ் சீரியல் ஒன்று இந்தியில் ரீமேக் செய்யப்படுவது இதுவே முதன்முறைஇ இது சின்னத்திரை உலகில் பெருமையாக பார்க்கப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post