யாழ் மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசங்களான கொழும்புத்துறை, ஈச்சமோட்டை, பாசையூர், கடற்கரை வீதி, பற்றிக்ஸ் வீதி, மத்தியூஸ் வீதி, நல்லூர், மாநகர பண்ணை பூங்கா பகுதி, நாவாந்துறை, சூரிய வெளி, சோனகதெரு, ஸ்ரான்லி வீதி, கோவில் விதி உள்ளிட்ட பகுதிகளில் புரெவி புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அசாதாரண நிலைமைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் இன்று (3) நேரில் சென்று ஆராய்ந்தார்.
முதல்வர் குறித்த விஜயத்தின் மூலம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டு ஆராய்ந்ததுடன், குறித்த பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநகர சுகாதாரப் பிரிவினால் மேற்கொள்ளக் கூடிய வியடங்களை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
மேலும் மாநகரத்திற்குள் ஏற்பட்டுள்ள புரெவி புயல் பாதிப்புக்கள் தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கு உரிய தகவல்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment