புரெவி புயல் அசாதாரண நிலைமைகள் காரணமாக யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புக்களை யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்கள் இன்று (5) நேரடிக் கள விஜயம் மேற்கொண்டு ஆராய்ந்தார்.
குறித்த வீதியில் வெள்ளப்பாதிப்புக்கள் அதிகளவில் நீண்ட நேரம் காணப்பட்டமையினை அவதானிக்க முடிந்தது. இதன் காரணத்தினால் ஸ்ரான்லி வீதி பகுதியளவில் குறிப்பிட்ட நேரம் போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டது.
குறித்த பகுதி கடை நடாத்துனர்கள் அவ் வீதியில் ஏற்பட்ட அனர்த்தம் மற்றும் பாதிப்புக்கள் தொடர்பில் முதல்வருடன் நேரடியாகக் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment