தோற்கடிக்கப்பட்டவர்கள் தவிர புதியவர்களை நிறுத்தினால் ஆதரவளிக்கத் தயார் - கஜேந்திரகுமார் அறிவிப்பு - Yarl Voice தோற்கடிக்கப்பட்டவர்கள் தவிர புதியவர்களை நிறுத்தினால் ஆதரவளிக்கத் தயார் - கஜேந்திரகுமார் அறிவிப்பு - Yarl Voice

தோற்கடிக்கப்பட்டவர்கள் தவிர புதியவர்களை நிறுத்தினால் ஆதரவளிக்கத் தயார் - கஜேந்திரகுமார் அறிவிப்பு




யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளராக இம்மானுவேல் ஆனல்ட் தவிர்ந்த வேறு ஒருவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறுத்தினால் அவரை ஆதரிக்க தயாராக இருப்பதாக  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நல்லூர் பிரதேசசபைக்கும் புதிய ஒரு வேட்பாளரை நியமித்தால் அவரையும் ஆதரிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை அறிவித்தார்.
 
'யாழ் மாநகரசபை முதல்வருக்கு இ.ஆனல்ட்டை தவிர்ந்த இன்னொருவரையும்இ நல்லூர் பிரதேசசபையின் தவிசாளருக்கு தியாகமூர்த்தி தவிர்ந்த இன்னொருவரையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளராக அறிவித்தால் அவர்களை ஆதரிக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி தயாராக இருக்கிறது.

அதேநேரம் இரண்டு சபைகளிலும் பழைய- பதவி விலகிய ஆனல்ட்இ தியாகமூர்த்தி இருவரையுமே வேட்பாளர்களாக நிறுத்தினால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அவர்களை எதிர்க்கும். அதேநேரம்இ எமது எதிர்ப்பையும் மீறி அவர்கள் வெற்றிபெற்றுஇ ஆட்சியமைத்தாலும்இ அவர்கள் சமர்ப்பிக்கும் வரவு செலவு திட்டத்தையும் எதிர்ப்போம்.

இதன்மூலம்இ இரண்டு சபைகளும் கலையும் நிலைமை ஏற்பட்டால்இ அதற்கான பொறுப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பே ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்றார்.

இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு.

யாழ் மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேசபையில் முதல்வர் தெரிவுக்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போட்டியிடாது. 

தோற்கடிக்கப்பட்ட மேயர்/தவிசாளர்களைத் தவிர வேறு யாரை நிறுத்தினாலும் கூட்டமைப்புக்கு ஆதரவளிக்கப்படும்.

பழைய சபை முதல்வர்கள் மீண்டும் போட்டியிட்டால் ஒரு போதும் ஆதரவளிக்கப்படாது. அதற்கான முழுப் பொறுப்பையும் கூட்டமைப்பே ஏற்க வேண்டும்

ஈபிடிபியை ஒரு போதும் ஆதரிக்க முடியாது. 

0/Post a Comment/Comments

Previous Post Next Post