பொன்னாலை மேற்கில் உள்ள வீதி ஒன்று எனது முன்மொழிவின் அடிப்படையில் வலி.மேற்கு பிரதேச சபையினால் புனரமைக்கப்படவுள்ளது.
இங்குள்ள மக்கள் வயல்களில் உள்ள கிணறுகளில் நன்னீர் எடுப்பதற்கும், விவசாயிகள் வயல்களுக்கு செல்வதற்கும் பயன்படுத்தும் ஸ்ரீ கண்ணன் வீதி முதலாம் ஒழுங்கையே புனரமைக்கப்படவுள்ளது.
மேற்படி வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் தொடர்ச்சியாக என்னிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய முன்னுரிமை அடிப்படையில் இந்த வீதியை புனரமைப்பதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீதி உட்பட வலி.மேற்கில் உள்ள மேலும் சில வீதிகளும் பிரதேச சபை உப அலுவலகங்களின் பகுதி வேலைகளும் செய்து முடிப்பதற்காக கேள்வி கோரப்பட்டுள்ளது.
வேலைகளை நேர்த்தியாக செய்து முடிப்பதற்கு ஆர்வமுடைய கேள்விதாரர்கள் வலி.மேற்கு பிரதேச சபையில் கேள்வி ஆவணம் ஒன்றைப் பெற்று பூரணப்படுத்தி எதிர்வரும் 11 ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச சபையில் ஒப்படைக்க முடியும்.
Post a Comment