கொரோனா தொற்று இல்லாத ஒருவரை கொரோனா வைத்தியசாலையில் அனுமதித்த்த உடுவில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் செயலினால் குடும்பஸ்தர் ஒருவர் மனநலப் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளார்.
மருதனார்மடம் சந்தையில் வெற்றிலைக் கடை நடாத்தும் பாபு என்பவர் சுன்னாகம் பகுதியில் வசித்து வருகின்றார். பாபுவிடமும் மாதிரி பெறப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இருப்பினும் அதன் பெறுபேறு நேற்றுவரை அவருக்கு தெரியப்படுத்தாத நிலையில் நேற்று அவரது வீட்டிற்குச் சென்ற அதிகாரிகள் குழுவினர் உனக்கிற்கு கொரோனா வைத்தியசாலைக்கு வரவும் என அழைத்துள்ளனர். இதனால் பாபு வாகனத்தில் ஏறிப்பயணித்துள்ளார்.
பாபுவை கோப்பாய் கல்வியல் கல்லூரியில் இயங்கும் கொரோனா வைத்தியசாலைக்கு சுன்னாகம் கண்ணகி முகாமில் வசிக்கும் ஓர் கொரோனா நோயாளியினையும் ஏற்றிக்கொண்டு வேறு ஒருவரது முகவரி தேடித் திரிந்த பின்பு வைத்தியசாலையினை வாகனம் அடைந்துள்ளது.
இதன்போது கோப்பாய் கல்வியல் கல்லூரி வாசலில் பதிவேட்டினை பரிசீலித்தவர் கொரோனா நோயாளர் பெயர் பட்டியலில் பாபுவின் பெயர் இல்லை எனக்கூறி இரண்டாவது நோயாளியை மட்டும் வைத்தியசாலைக்குள் அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்து பாபு மீண்டும் வீட்டில் கொண்டு சென்று இறக்கப்பட்டபோதும் கொரோனா நோயாளிகூட வைத்தியசாலைக்கு பயணித்தமையினால் கொரோனா தொற்று ஏற்படுமோ என அஞ்சுகின்றார்.
Post a Comment