சிட்னியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ரோகித் சர்மா நாளை இந்திய கிரிக்கெட் அணியுடன் இணைய உள்ளார். அவர் 3-வது போட்டியில் விளையாடுகிறார்.
இந்திய அணியின் அதிரடி தொடக்க பேட்ஸ்மேனான ரோகித் சர்மா காயம் காரணமாக முதல் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை.
3-வது போட்டியில் விளையாட உடற்தகுதி பெற்றதால் கடந்த 16-ந்தேதி ஆஸ்திரேலியா சென்றடைந்தார். அன்றைய தினத்தில் இருந்து 14 நாட்கள் கோரன்டைனில் இருக்கிறது. 14 நாட்கள் முடிவடைந்ததையொட்டி நாளை மெல்போர்னில் இருக்கும் இந்திய அணியுடன் ரோகித் சர்மா இணைகிறார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதனால் மெல்போர்னிலேயே 3-வது போட்டி நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மெல்போர்ன் வந்து அணியுடன் இணைகிறார்.
3-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 7-ந்தேதி சிட்னியில் நடைபெற இருக்கிறது. இன்றைய போட்டி முடிந்த பின்னர் இந்திய அணி கேப்டன் ரஹானேஇ ரோகித் சர்மா அணியில் இணைய இருப்பது குறித்து ஆர்வமாக இருக்கிறோம்'' என்றார்.
Post a Comment