சங்கானை மரக்கறி சந்தை நாளை முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறதாக வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.
சங்கானை மரக்கறி சந்தை வியாபாரிகளிற்கு P.C.R பரிசோதனை செய்வது தாமதமாகி விட்டதால் மேற்கொண்டு அச்சத்துடன் சந்தையை இயக்கமுடியாத காரணத்தால் நாளை 15/12/2020 அன்றில் இருந்து சந்தை மூடப்படுகிறது.
பரிசோதனைகள் மேற்கொண்டு அச்சமற்ற வகையில் பெறுபேறுகள் அமைந்தால் மட்டுமே சந்தை மீள இயக்கப்படும் என வலிமேற்கு பிரதேச சபையின் தவிசாளர் கெளரவ த .நடனேந்திரன் அறியத்தந்துள்ளார்.