2014-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் ரஷ்ய வீரர்கள் பலர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினர்.
வீரர்களுக்கு ரஷ்யாவே உதவியாக இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
மேலும் ஊக்கமருந்து பரிசோதனை ஆய்வகத்தில் இருந்த தகவல்களை உலக ஊக்கமருந்து தடுப்பு மையத்திற்கு வழங்குவதற்கு முன்னர் அவற்றை அழித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு விளையாட்டுக்கான தீர்ப்பாயத்தில் நடைபெற்றது.
இதன்போது அடுத்த இரண்டு ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா நாட்டின் பெயரையும்இ கொடியையும் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பொதுவான அணி அல்லது பொது வீரர் என்ற அடிப்படையில் ரஷ்ய வீரர்கள்இ வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment