யாழ்.பருத்துறையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று திரும்பியவாின் வீடு உடைக்கப்பட்டு பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருக்கின்றது.
பருத்துறை - ஓடக்கரை பகுதியில் நடைபெற்றுள்ள குறித்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, குறித்த பகுதியை சோ்ந்த நபா் ஒருவா் தனது மாமியாருடைய சிகிச்சைக்காக கொழும்பு சென்று திரும்பிய நிலையில்
பருத்துறையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. 2ம் கட்ட பாிசோதனையில் குறித்த நபாின் மனைவி, பிள்ளை, மாமியாா் என வீட்டிலிருந்த சகலருக்கும் தொற்று உறுதியான நிலையில்
யாழ்.கோப்பாயில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று இன்றைய தினம் வீடு திரும்பிய நிலையில் வீடு உடைக்கப்பட்டு திருட்டு இடம்பெற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடா்பாக பருத்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸாா் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா். குறித்த 4 பேரும் அடுத்த ஒரு வாரம் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்கவேண்டும்.
என்பது சுகாதார பாதுகாப்பு நடைமுறை என்பதால் பொலிஸாா் வீட்டுக்குள் சென்று விசாரணை நடத்த முடியாத நிலை காணப்படுகின்றது. எனினும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் 80 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பெறுமதியான தொலைபேசி மற்றும், கமரா ஆகியன கொள்ளையிடப்பட்டதாக பொலிஸாா் கூறுகின்றனா்.
Post a Comment