நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை நாளை மறுநாள் வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்இ தான் கட்சி தொடங்கவில்லை என ரஜினிகாந்த் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரஜினிகாந்த் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்...
என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை தவறமாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சென்னால் நாலு பேர் நாலுவிதமாக என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.
ஆகையால் நான் கட்சி ஆரம்பித்துஇ அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும். என பதிவிட்டுள்ளார்.
இதனால் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா? என்ற கேள்விக்கு இல்லை என்ற பதில் கிடைத்துள்ளது.
Post a Comment