சிறிலங்கா அரசாங்கத்தைக் காப்பாற்றுகின்ற வகையிலையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
செயற்பாடுகள் அமைகின்றன. அதன் தொடராகவே nஐனிவா மனித உரிமைகள் பேரவையிலும்
சிறிலங்காவிற்கு மீண்டும் கால அவகாசத்தை பெற்றுக் கொடுக்கம் வகையில் செயற்படுகின்றனர்.
உண்மையில் தமிழ் மக்களிற்கு ஒரு முகத்தையும் அரசிற்கு இன்னொரு
முகத்தையும் காட்டி இரட்டை வேடம் போடுகின்ற செயற்பாடுகளைவே கூட்டமைப்பினர் முன்னெடுத்து
வருகின்றனர்.
இவ்வாறு கூட்டமைப்பை பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கNஐந்திரகுமார் பொன்னம்பலம் இத்தகைய விடயங்களை
பிடி கொடுக்காமல் நாசுக்காக செய்வதற்கு பழக்கப்பட்ட ஒருவராக சுமந்திரன் இருந்தாலும்
அவருடைய அத்தகைய போக்குகளை ஆரம்பத்திலிருந்தே எங்களைப் போன்றவர்கள் புரிந்து
கொண்டு மக்களுக்கு அம்பலப்படுத்தி வந்திருக்கின்றோம். ஆனாலும் அத்தகைய செயற்பாடுகளையே அவர் இன்றைக்கும் செய்து வருகின்றதாகவும் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது அவர்
மேலும் தெரிவித்ததாவது..
வரவு செலவுத் திட்டம் விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த இறுதி நாளில் சுமந்திரன் அவர்கள் என்னோடும் எமது கட்சிசியின் செயலாளர் அவர்களோடும் கதைத்திருந்தார்.
அதன் போது nஐனிவா அமர்வில் இந்த முறை 2 வருட கால அவகாசம் முடிவடைகின்ற நிலையிலே அந்த உறுப்பு நாடுகளுக்கு இலங்கை தொடர்பாக எப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது சம்மந்தமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எழுத்து மூலமான மகஐரொன்றை தயாரித்திருப்பதாகவும் அதனை ஒரு பொது மகஐராக ஏனைய தமிழ்க் கட்சிகளும் பொது அமைப்புக்களும் புத்துஐPவிகளும் ஏற்று கையொப்பமிட்டு அனுப்பக் கூடிய ஆவணமாக அது வெளிவருவது தான் பொருத்தமாக இருக்குமென்று கூறி எம்மிடம் அதனுடைய பிரதியொன்றையும் வழங்கினார்.
அதன் பின்னர் எம்முடைய அமைப்பு எங்களுடைய சட்ட ஆலோசகர்களிடமும் மனித உரிமைகள் சம்மந்தப்பட்ட விடயத்தில் செயலாற்றுபவர்களுடனும் பேசியதன் பிற்பாடு நாங்கள் அந்த
வரைபை நிராகரிக்கின்றதொரு நிலைப்பாட்டிற்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
அந்த அறிக்கையானது ஏழு பக்ககங்களைக் கொண்ட அறிக்கையாக இருக்கின்றது. அதன் முக்கால் வாசி
அதாவது பெரும்பாலானவை உண்மையிலே கூட்டமைப்பு கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து ஐ.நா மனித
உரிமை பேரவை சம்மந்தப்பட்ட விடயங்களை தாங்கள் முன்னெடுத்த அல்லது ஆதரித்த விடயங்களை
நியாயப்படுத்துகிற கோணத்தில் தான் அமைந்திருந்தது.
இவ்வாறு அவை எல்லாத்தையும் சொல்லி ஆனால்; அதில் ஒரு இடத்தில் அப்படியெல்லாம் செய்தும்
கூட அந்த தீர்மானங்கள் ஊடாக எந்தவிதமான பலனும் தமிழ் மக்களுக்கும் கிடைக்கவில்லை
என்றதொரு வசனத்தையும் அதில் சேர்த்திருக்கின்றார்கள்.
ஆனால் அதற்கு மேலதிகமாக
அப்படியிருந்தும் கூட சிறிலங்காவை தொடர்ந்தும் சர்வதேச அரங்கில் வைத்திருக்க வேண்டும்
என்பதற்காக சர்வதேச சமூகம் அதற்குரிய வகையில் ஒரு முடிவை எடுக்க வெண்டுமென்றும் அதில் ஒரு
கோரிக்கையாகவும் முன்வைத்திருக்கின்றனர்.
எம்மைப் பொறுத்தவரையில் அந்த ஆவணத்தை மிகவும் கவனமாக நாங்கள் படித்தோம். அவ்வாறு அதனை
முழுமையாக நாங்கள் தொகுத்துப் பார்க்கின்ற பொழுது மீண்டும் ஒருமுறை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குகின்ற கோணத்தில் தயாரிக்கப்பட்ட ஆவணமாகத் தான் நாங்கள் அதனைப் பார்க்கின்றோம்.
அந்த வகையில் கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்த அதாவது முதலாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்து அந்தத் தீர்மானங்களை கடுமையாக விமர்சித்து வருகின்ற
ஒரு தரப்பாகவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செயற்பட்டு வருகின்றது.
அதாவது மனித உரிமைப் பேரவை அரங்கு என்பது தமிழ் மக்களின் பொறுப்புக் கூறலை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையில் அந்தப் பொறுப்புக் கூறலை அடையாமல் முடக்கப்பட்டு இருக்கின்ற அரங்காககத் தான் அதனை கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் விமர்சித்தக்
கொண்டு வருகின்றோம்.
அதே சமயம் நாங்கள் மிகத் தெளிவாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அல்லது ஒரு சர்வதேச விசேட குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றின் ஊடாக தான் ஒரு பொறுப்புக் கூறல் முழுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிட்டும் என்ற விடயத்தை நாங்கள் இங்கு மட்டுமல்ல ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும் ஆணித்தரமாக பதிவிட்டு வந்திருக்கின்றோம்.
ஆகவே அந்தப் பிண்ணணியில் சுமந்திரன் அவர்களும் கூட்டமைப்பும் தயாரித்த அந்த அறிக்கையில் நாங்கள் கையொப்பம் இட முடியாது. அந்த நிலைமை சுமந்திரன் அவர்களுக்கே
நன்றாகத் தெரியும்.
ஏனெனில் அந்த மகஐரை எங்களிடம் கொடுத்த போதும் கூட மனித உரிமை
பேரவையில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றது எங்களுக்குத் தெரியும்.
எனினும் மனித உரிமைப் பேரவையில் இலங்கையை தொடர்ந்தும் வைத்திருக்கிற வரைக்கும் இந்த
நாடுகள் குற்றவியல் நீதிமன்றத்திற்கோ அல்லது வேறு ஒரு அரங்கிற்கோ கொண்டு போவதற்கு இந்த நாடுகள் பெரியளவில் அக்கறை காட்ட மாட்டார்கள் என்பது தான் உங்கள் கருத்து
என்பதும் எங்களுக்கு தெரியும். இருந்த போதிலும் கூட நீங்கள் இந்த மகஐரப் படித்துப் பாருங்கள் என்று தான் அதனை எங்களிடம் கொடுத்திருந்தார்.
ஆகவே நாங்கள் அந்த அறிக்கையை
ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலைமையில் இல்லை என்பது அவருக்கே தெரியும். நாங்கள் அதை வாசிப்பதற்கு முதலே அதற்கான எங்களுடைய பதில் எப்படியிருக்கும் என்றது அவருக்கே
தெரிந்திருந்தது.
எம்மைப் பொருத்தவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய செயற்பாடுகள் மிகவும்
துரதிஸ்ரவசமாக கடந்த வரவு செலவுத் திட்டத்தில் கூட மக்களுக்கு ஏதோவொன்றை அதாவது தாங்கள்
சரியான வழியில் செயற்படுவதாக காட்டுகிறதற்காக விவாதங்களில் கலந்து கொண்டு ஒரு முகத்தைக்
காட்டி ஆனால் முக்கியமான வாக்கெடுப்பு நேரத்தில் எப்படி அவர்கள் எதிர்க்காமல்
இருந்தார்களோ அதே போன்று ஏதோ மனித உரிமைகள் சம்மந்தப்பட்ட விடயத்தில் அல்லது பொறுப்புக் கூறல் சம்மந்தப்பட்ட விடயத்தில் ஏதோ தங்களுக்கும் அக்கறை இருக்கு என்பதைக் காட்டுவதற்காக ஒரு முகத்தையும் காட்டி இன்னொரு இடத்தில் அரசாங்கத்திற்கு மீண்டும் கால
அவகாசத்தை பெற்றுக் கொடுக்கிற கோணத்தில் தான் அவர்கள் செயற்பட்டுக் கொண்டு
வருகின்றார்கள்.
ஆகவே அவர்களின் இத்தகைய செயற்பாடுகள் ஆச்சரியப்பட வேண்டிய விடயமல்ல. தேர்தலுக்குப்
பிற்பாடு அதாவது இந்த அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறிய பிற்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்ற பாதையின் தொடர்ச்சியாகத் தான் இந்த மகஐர் விடயத்தையும்
நாங்கள் பார்க்கின்றோம்.
மேலும் மனித உரிமைப் பேரவை பொருத்தமில்லாத ஒரு அரங்கு. அதிலே கடந்த காலங்களில் எத்தனையோ தீர்மானங்கள் நிறைவேற்றியும் பதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவிதமான ஒரு பலனும் கிடைக்கவில்லை என்று மக்களுக்கு ஒரு பக்கம் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொடுத்து அதே சமயம் தொடர்ந்தும் சிறிலங்காவை தொடர்ந்தும் மனித உரிமைகள் பேரவை அரங்கில் வைத்திருக்க
வெண்டுமெனக் கேட்பது வேறு எந்த அடிப்படையில் அல்லது இதில் வேறு எந்த முடிவிற்கு நாங்கள் வரலாம்.
ஏங்களைப் பொறுத்தவரையில் ஒரு பக்கம் அதில் பிரயோசனமும் இல்லை என்று சொல்லிப் போட்டு ஆனால் தொடர்ந்து சிறிலங்காவை தொடர்ந்தும் அந்த அரங்கில் வைத்திருக்க
வேண்டுமெனக் கேட்பது கால அவகாசம் இல்லாமல் வேறு எந்த முடிவிற்கு எவரும் வர முடியாது.
சுமந்திரன் ஒரு சட்டத்தரணி. அவர் நாசுக்காக அந்த விடயத்தை பிடி கொடுக்காமல் சொல்வதற்கு
பழக்கப்பட்ட ஒருவர். ஆனால் நல்ல காலத்திற்கு எங்கள் போன்றவர்கள் அவருடைய அந்தப் போக்கை ஆரம்பத்திலிருந்து புரிந்து எங்கள் மக்களுக்கு அதனை நாங்கள் அம்பலப்படுத்திக் கொண்டு வருகின்றோம். அது தான் இன்றைக்கும் நடக்கின்றது.
சிறிலங்கா அரசாங்கத்தை வெளிப்படையாக ஆதரித்தால் வடகிழக்கு மண்ணில் அவர்களுக்கு கால்
வைக்க முடியாமல் போகும். ஆகவே ஏதோவொரு வகையில் மக்களை ஏமாற்றுவதற்காக பேச்சுக்களில்.
அரசாங்கத்தை விமர்சிப்பதாகவும் ஆனால் மிக முக்கியமான இடங்களில் அவர்கள் அரசாங்கத்தை
காப்பாற்றுகின்ற கோணத்தில் தான் செயற்பட்டு வருகின்றார்கள்.
குறிப்பாக வரவு செலவுத் திட்டத்தில் மிகவும் தெளிவாகவெ எதிர்க்காமல் இருந்தனர். அதுவும் பாதுகாப்பு அமைச்சில் எதிர்க்காமல் இருப்பதென்பது மன்னிக்க முடியாத குற்றம். ஆனாலும்
அந்தளவு தூரத்திற்கு அவர்கள் துணிகின்றார்கள்.
ஏதோவொரு வகையில் விக்கினேஸ்வரன் கூறியதைப் போல நடுநிலை வகிப்பதன் ஊடாக ஆதரவை கொடுப்பதாக இல்லை என்ற நியாயத்தைச் சொல்லி தப்பிக்க அவர்கள் முயற்சிக்கின்றார்கள். ஆனால் கடந்த 10 வருடத்தில் இவ்வாறான
விடயங்களை அனுபவப்பட்டு இருக்கின்ற நிலையில் இவர்களுடைய செயற்பாடுகளை மக்கள் சரியாகப்
புரிந்து கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம் என்றார்.
Post a Comment