நான்காவது அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாட்டின் கடைசி நாளில் பொலிசாரினால் நடாத்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட ஒன்பது தமிழர்களுக்கான 47வது ஆண்டு நினைவு நாள் ஜனவரி மாதம் 10ஆம் திகதி காலை 9:30 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் உள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவிடத்தில் நடைபெறும்.
இதில் தமிழ் தேசிய உணர்வாளர்களையும், அரசியல் கட்சி தலைவர்களையும், அரசியல் கட்சி ஆதரவாளர்களையும் மற்றும் பொது மக்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
எம்.கே. சிவாஜிலிங்கம்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
Post a Comment