பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் கோப்பாய்த் தொகுதிக்கான மக்கள் தொடர்பாடல் அலுவலகம் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குழுக்களின் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார்.
குறித்த அலுவலகம் கோப்பாய் சந்திக்கு அருகில், மானிப்பாய் வீதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வின் ஆரம்பத்தில் கோப்பாய் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்று நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன் உள்ளிட்டவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
நிகழ்விற்கு தொகுதி அமைப்பாளர்கள், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment