நிலாவரை கிணறு அருகாமையில் தொல்பொருள் திணைக்களம் அகழ்வாராச்சியால் பதற்றம் - Yarl Voice நிலாவரை கிணறு அருகாமையில் தொல்பொருள் திணைக்களம் அகழ்வாராச்சியால் பதற்றம் - Yarl Voice

நிலாவரை கிணறு அருகாமையில் தொல்பொருள் திணைக்களம் அகழ்வாராச்சியால் பதற்றம்




யாழ்ப்பாணம் - நிலாவரை கிணறு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுகிறது.

இன்று முற்பகல் நிலாவரைக் கிணறு பகுதிக்கு வருகை தந்த தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், மரம் ஒன்றின் கீழ் அகழ்வு நடவடிகையை முன்னெடுத்து ஆய்வுப் பணிகளை முன்னெடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.

குறித்த இடயில் கட்டடம் ஒன்று இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது எனவும், அதுதொடர்பில் ஆய்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வுப் பணிக்கான செலவு மதிப்பீட்டை தயாரிப்பதற்கான பணி இன்று முன்னெடுக்கப்பட்டதாகவும், செலவீட்டுக்கு அனுமதி கிடைத்ததும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படும் என்று அதிகாரிகள் மேலும்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Previous Post Next Post