தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தனது ரசிகரின் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவருக்கு ரசிகர்கள் ஏராளம். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவ 'அகரம்' அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.
அதேபோல் அவரது ரசிகர்களும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சூர்யா நற்பணி இயக்க வட சென்னை தெற்கு மாவட்ட தலைவர் ஹரி ராஜ் - பிரியா திருமணத்திற்கு நடிகர் நேரில் சென்று தாலி எடுத்து கொடுத்து வாழ்த்தினார்.
இந்நிகழ்வில் சூர்யா நற்பணி இயக்க நிர்வாகிகள்இ ரசிகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
Post a Comment