கொரோனா வைரஸினால் உயிரிழப்பவர்களின் உடல்களை தகனம் செய்வதே அரசாங்கத்தின் தற்போதைய தீர்மானமாக இருக்கின்றது என்றும் எந்த மாற்றமும் இம்முடிவில் இல்லை எனவும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடந்த ஊடக சந்திப்பில் பேசியபோது அவர் இதனைக் கூறினார்.
சுகாதாரத்துறையினர் வழங்கியுள்ள பரிந்துரைகளுக்கு அமையவே அரசாங்கம் செயற்படுகிறது. அதனை மீறிச் செயற்பட்டால் ஏற்படுகின்ற பின்விளைவுகளை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டியேற்படும். ஆகவே இதுவிடயத்திவ் தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது என்று அமைச்சர் கூறினார்.
Post a Comment