வைத்தியர் நியமனத்தில் தீவக வைத்தியசாலைகள் புறக்கணிப்பு - Yarl Voice வைத்தியர் நியமனத்தில் தீவக வைத்தியசாலைகள் புறக்கணிப்பு - Yarl Voice

வைத்தியர் நியமனத்தில் தீவக வைத்தியசாலைகள் புறக்கணிப்பு




ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை வைத்தியர் பற்றாக்குறை  காணப்படுவதனால் தீவக மக்கள் மருத்துவ தேவைகளை உரிய நேரத்தில் பெற முடியாத அவல நிலை காணப்படுவதாக  -பொது வைத்திய நிபுணர் கல்பனா சிறிமோகனன் கவலை வெளியிட்டுள்ளார்

ஊர்காவற்துறை  வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டகதிரியக்கப் பிரிவு ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

. ஒரு வருடமாக எந்தவொரு மருத்துவரும் தனக்கு பிரத்தியேகமாக நியமிக்கப்படாத நிலையில் மருத்துவ நிபுணர் ஆகிய தான் எந்த அடிப்படை வசதிகளுமின்றி கடமையாற்றி வருவதாகவும் 15 வைத்தியர்கள் இருக்க வேண்டிய 

ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் 5 வைத்தியர்களே கடமையாற்றுவதாகவும் இதன் காரணமாக தீவுப்பகுதி மக்கள் தமக்குரிய மருத்துவ சேவையினை உரிய காலத்தில் பெற முடியாத அவல நிலை காணப்படுவதாகவும்

ஏனைய கடல் கடந்த தீவுகளில் இருந்து வைத்திய சேவைக்கு வருபவர்களுக்கு உரிய மருத்துவ வசதியை வழங்காது விடும் போது அந்த வறிய மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவதாகவும்.

இவ்வாறான நிலையில் தானும் மாற்றலாகி செல்ல இருப்பதாகவும் இனி வரும் காலத்திலாவது இந்த வைத்தியசாலை ஏனைய யாழ் மாவட்ட ஆதார வைத்தியசாலைகளான பருத்தித்தித்துறை, தெல்லிப்பளை , சாவகச்சேரி   வைத்தியசாலைமருத்துவர் நியமனங்கள்  போல் தீவல வைத்தியசாலைகளுக்கும் வளப் பங்கீடுகள் மேற்கொள்ள வேண்டியது அவசியமானதொன்றாகும்

வளமாக வாழ்ந்து தற்போது நலிவுற்ற நிலையிலுள்ள தீவக மக்களின் அடிப்படை தேவையான மருத்துவ வசதியைப் பூர்த்தி செய்து கொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்

வைத்திய அத்தியட்சகர் ப.தீலிபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் யாழ், போதனா வைத்தியசாலை பணிப்பாளர், வைத்திய நிபுணர்கள், மருத்துவர்கள், பிரதேச செயலர், நலன்புரி சங்கத்தினர் ஊழியர்கள் சுகாதார நடைமுறைகளுடன் கலந்து  கொண்டனர்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post