கடற்படையினரிடமுள்ள தமது காணிகளை மீட்டுத் தரக் கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் தீவக மக்கள் முறைப்பாடு - Yarl Voice கடற்படையினரிடமுள்ள தமது காணிகளை மீட்டுத் தரக் கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் தீவக மக்கள் முறைப்பாடு - Yarl Voice

கடற்படையினரிடமுள்ள தமது காணிகளை மீட்டுத் தரக் கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் தீவக மக்கள் முறைப்பாடு



யாழ்ப்பாணம் - வேலணை பிரதேச செயலர் பிரிவுட்குட்பட்ட மண்கும்பான் 5 ஆம் வட்டாரத்திலுள்ள கடற்படை பிரதான முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 15 ஏக்கர் காணியினை விடுவிக்குமாறு கோரி இன்றைய தினம் காணி உரிமையாளர்களால் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு  பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 30 வருடகாலமாக தனியாருக்குச் சொந்தமான குறித்த 15 ஏக்கர் காணியில் தீவகத்திற்கான கடற்படையின் பிரதான முகாம் அமைக்கப்பட்டு காணி கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த காணியினை சுவிகரிப்பதற்குரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் குறித்த 15 ஏக்கர் காணி உரிமையாளர்கள் தமது காணியினை பெற்றுத் தருமாறு கோரி யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post