வட மாகாணத்தில் COVID-19 தடுப்பூசி 2997 பேருக்கு இன்று ஏற்றப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கொவிட் தடுப்பூசிகள் இன்று வடமாகாணத்தில் சுகாதாரதுறை சார்ந்த தரப்பினருக்கு ஏற்றப்பட்டது.
வடக்கில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சர் இது முதலாவது ரோடு தடுப்பூசி போடப்பட்டது அதனைத் தொடர்ந்து யாழ் போதனா வைத்திய சாலையில் கொரோனா தடுப்பு ஊசி ஏற்றும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வடக்கு மாகாணத்தில் உள்ள பிரதேச வைத்திய சாலைகளில் சுகாதார பிரிவினருக்கு தடுப்பூசிகள் இன்று ஏற்றப்பட்டது.
இதற்கமைய யாழ்ப்பாணம் -1586
மன்னார் - 448
வவுனியா - 360
முல்லைத்தீவு - 313
கிளிநொச்சி - 290 பேர் என 2997 பேருக்கு வடமாகாணத்தில் இன்று தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இது வட மாகாண சுகாதாரத் துறையின் 30 வீதம் என்றும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று தொடர்ந்து வரும் நாட்களிலும் முதற்கட்டமாக சுகாதாரப் பிரிவினர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளதாகவும் இதைத்தொடர்ந்து ஏனைய துறை சார்ந்தவர்களுக்கு தொடர்ந்தும் தடுப்பூசிகள் ஏற்றப்படும் என்றும் மாகாண சுகாதார பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
Post a Comment