ஊடகவியலாளர் ,நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தியின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
யாழ்.ஊடக அமையன் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் இன்று மதியம் 12 மணியளவில் யாழ்.ஊடக அமையத்தில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் சிரேஸ்ர ஊடகவியலாளர் செல்வக்குமார் சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து அமரர் சத்தியமூர்த்தியுடன் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் , அவரது நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2 ஆயிரத்து 9 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி இறுதி யுத்தத்தின் போது பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்தில் இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் சத்தியமூர்த்தி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment