வடக்கு மாகாணத்தில் தற்போது 2 லட்சத்து 33 ஆயிரத்து 144 மோட்டார் சைக்கிள் உள்ளமை 2020 ஆண்டின் வரிப் பத்திரத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு வடக்கு மாகாண மோட்டார்த் திணைக்களத்திற்கு வாகன வரியாக கிடைத்த வருமானம் 390 மில்லியன் ரூபா கிடைத்துள்ளது.
இவ்வாறு 2020 ஆம் ஆண்டு 390 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்தபோதும் 2019ஆம் ஆண்டு 382 மில்லியன் ரூபாவே வருமானமாக கிடைத்துள்ளது.
இவ்வாறு கிடைத்த 390 மில்லியன் ரூபாவும் 2 லட்சத்து 99 ஆயிரத்து 935 வாகனங்களிற்கு செலுத்தப்பட்ட வரி வருமானமாகவே கிடைத்துள்ளது.
இந்த 2 லட்சத்து 99 ஆயிரத்து 935 வாகனங்களில் வடக்கில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 144 மோட்டார் சைக்கிளிற்கான வரியாக செலுத்தப்பட்டுள்ளதோடு 66 ஆயிரத்து 789 ஏனைய வாகனங்களிற்கான வரியாக செலுத்தப்பட்டுள்ளது.
இதேநேரம் பல தனியார் வாகனங்கள், திணைக்கள வாகனங்கள், சபை வாகனங்கள் தற்போதும் பிற மாகாண பதிவுகளில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment