பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்திற்கு 6.2 மில்லியன் ரூபா பெறுமதியான நவீன பனை வெல்ல பொறித்தொகுதி வழங்கப்பட்டது - Yarl Voice பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்திற்கு 6.2 மில்லியன் ரூபா பெறுமதியான நவீன பனை வெல்ல பொறித்தொகுதி வழங்கப்பட்டது - Yarl Voice

பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்திற்கு 6.2 மில்லியன் ரூபா பெறுமதியான நவீன பனை வெல்ல பொறித்தொகுதி வழங்கப்பட்டது


யாழ்ப்பாணம் - கரவெட்டி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்திற்கு 6.2 மில்லியன் ரூபா பெறுமதியான நவீன பனை வெல்ல பொறித்தொகுதி இன்றையதினம் வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணம் - காரைநகர் பனை அபிவிருத்தி சபை உற்பத்தி நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போதே  இலங்கை பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிருஷாந்த பத்திராயவினால் குறித்த கூட்டுறவு சங்கத்திற்கு  கையளிக்கப்பட்டது.

இந்த பனை வெல்லத்தொகுதியால் யாழ் மாவட்டத்தில் மாதமொன்றிற்கு 3ஆயிரம் கிலோக்கிராம் பனை வெல்லத்தை உற்பத்தி செய்யமுடியும் என பனை அபிருத்தி சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நிகழ்வில் பனை அபிவிருத்தி சபையின் அதிகாரிகள்இ  உத்தியோகத்தர்கள்இ யாழ் மாவட்ட பனை தென்னைவள பலநோக்கு கூட்டுறவுச்சங்கங்களின் தலைவர்கள் மற்றும் உற்பத்தி தொழிலாளர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்து.

0/Post a Comment/Comments

Previous Post Next Post