கொரோனா பரிசோதனை: வடமராட்சி-பருத்தித்துறையில் 86 பேரிடம் மாதிரிகள் சேகரிப்பு! - Yarl Voice கொரோனா பரிசோதனை: வடமராட்சி-பருத்தித்துறையில் 86 பேரிடம் மாதிரிகள் சேகரிப்பு! - Yarl Voice

கொரோனா பரிசோதனை: வடமராட்சி-பருத்தித்துறையில் 86 பேரிடம் மாதிரிகள் சேகரிப்பு!




வடமராட்சி பருத்தித்துறையில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் 86 பேரிடம் கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்பு கொண்டிருந்த அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ள 86 பேரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் இன்று சனிக்கிழமை பெறப்பட்டுள்ளது.

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதரிகாரி பிரிவிற்கு உட்பட்ட தும்பளை பகுதியில் வசித்து வரம் நடன ஆசிரியை ஒருவருக்கும், முனை கோரியரி தேவாலயம் ஒன்றுடன் தொடர்புபட்ட நிலையில் ஒருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக நடன ஆசிரியையின் மகன் உள்ளிட்ட மாணவர்கள் மூவர் உள்ளடங்கியதாக மேலும் 12 பேருக்கு கடந்த தினத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து குறித்த இரு வெவ்வேறு தொற்றாளர்களுடன் முதலாவது தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் 86 பேரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று சனிக்கிழமை முற்பகல் இடம்பெற்றிருந்தது.

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதரிகாரிகளின் நேரடி ஏற்பாட்டில் தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள பிரத்தியேக இடமொன்றில் குறித்த மாதிரிகள் பெறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post