பெப்ரவரி மாதத்தின் கடந்த 11 நாட்களில் மட்டும் வடக்கு மாகாணத்தில் 78 பேருக்கு
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வடக்கு மாகாண சுகாதார
சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தொற்று ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல்
இதுவரையில் 889 பேருக்கு வடக்கில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்
குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் பண்ணையிலுள்ள மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள அலுவலகத்தில் நேற்று;
நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம்
தொடர்பில் பணிப்பாளர் மேலும் தெரிவித்ததாவது..
வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் தற்போது கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்
காணப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக இந்த மாதத்தில் மட்டும் இதுவரையில் 78 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இதில் மன்னார் மாவட்டத்தில் 38, கிளிநொச்சி 15, யாழ்ப்பாணம் 12, வவுனியா 12
முலலைத்தீவு ஒருவருக்குமாக 78 பேருக்கு இதுவரையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த தொற்று ஆரம்பித்த காலம் முதல் இதுவரையான காலப் பகுதியில் வடக்கு மாகாணத்தைப்
பொறுத்தவரையில் 889 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இதில் வவுனியா
மாவட்டத்திலேயே அதிகளவிலானோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது வவுனியா மாவட்டத்தில் 374 பேருக்கும் யாழ் மாவட்டத்தில் 233 பேருக்கும் மன்னார்
மாவட்டத்தில் 24 பேருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் 49 பேருக்கும் முல்லைத்தீவு
மாவட்டத்தில் 13 பேருக்குமாக 889 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment