தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட தெல்லிப்பளை சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியில் வாடிக்கையாளர் சேவையானது கணணி மயப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கான ஆரம்ப நிகழ்வுகள் 6.2.2021 சனிக்கிழமை காலைபிரதேச செயலாளர் .ச. சிவஸ்ரீ அவர்களின் தலைமையில் சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் ப.திலக சிறி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது .
இந் நிகழ்விலே சமுர்த்தி குறு நிதி பணிப்பாளர், சமுர்த்தி வாழ்வாதார பணிப்பாளர்|சமுர்த்தி மாவட்டப் பணிப்பாளர் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சமுர்த்தி முகாமையாளர்கள் , உத்தியோகத்தர்கள், பயனாளிகள் ஆகியோரது பங்குபற்றலுடன் சிறப்பாக நடைபெற்றது
Post a Comment