வடக்கு மாகாணத்தில் இன்றைய தினமும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் 444 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுக்கூடத்தில் 374 பேருக்கு
மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 2 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பேருந்தில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இருவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதில் பூநகரியிலுள்ள பாடசாலையொன்றில் கடமையாற்றும் யாழ்ப்பாணம் சாவகச்சேரி சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கும் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
அதேபோன்று மன்னாரிலிருந்து பேருந்தில் யாழிற்கு வந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அதிலும் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில் 3 மூவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் ஆடைத் தொழிற்சாலையொன்றில் கடமையாற்றும் வர்கள் எனவும் சுகாதார பணிப்பாளர் தெரிவித்தார்.
Post a Comment