முதல்வர் நாராயணசாமி கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானம் மீது வாக்களிக்காமல் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் வெளியேறினர்.
இதனால், முதல்வர் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரும் தீர்மானம் தோல்வியடைந்ததாக அவைத் தலைவர் சிவக்கொழுந்து அறிவித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்ததை அடுத்து, முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 14 பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். இதையடுத்து, நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக அவைத் தலைவர் சிவக்கொழுந்து அறிவித்தார்.
புதுச்சேரியில் அரசு பெரும்பான்மையை இழந்த நிலையில் கவர்னர் மாளிகைக்கு நாராயணசாமி சென்றார். அங்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
Post a Comment