மாநகரத்திற்கு வரும் மக்களுக்கு வீண்சிரமங்களையும் அலச்சல்களையும் ஏற்படுத்தாதீர்கள் - பணியாளர்களிடம் முதல்வர் கோரிக்கை - Yarl Voice மாநகரத்திற்கு வரும் மக்களுக்கு வீண்சிரமங்களையும் அலச்சல்களையும் ஏற்படுத்தாதீர்கள் - பணியாளர்களிடம் முதல்வர் கோரிக்கை - Yarl Voice

மாநகரத்திற்கு வரும் மக்களுக்கு வீண்சிரமங்களையும் அலச்சல்களையும் ஏற்படுத்தாதீர்கள் - பணியாளர்களிடம் முதல்வர் கோரிக்கை



யாழ்.மாநகர சபையினால்  மேற்கொள்ளப்படும் சேவைகளை மேம்படுத்துவது தொடர்பாக யாழ்.மாநகர சபையின் கிளைத்தலைவர்களுக்கும் யாழ்;.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த முதல்வர். 
தரப்பட்ட ஒரு வேலையினை செய்து முடிக்காமல் அதற்கான காரணத்தை மற்றவர்கள் மேல் தட்டிவிடுகின்ற (Boll Passing)  சாதாரண பணியாளர்களாக இல்லாமல் தந்த பொறுப்பினை செய்து முடிக்கின்ற ஆளுமை மிக்க பணியாளர்களாக இருக்க வேண்டும். அத்துடன் உங்களுக்கு கீழ் உள்ள பணியாளர்களை குற்றம் சொல்லாமல் அவர்களையும் ஆளுமைமிக்க அர்பணிப்பு மிக்க பணியாளர்களாக மாற்றுவதில் தான் உங்களுடைய ஆளுமையும் தங்கியுள்ளது 

நான் அரச தாபனக் கோவைகளை அறியாதவன். அது தொடர்பாக எனக்கு தெரியாதவற்றை நீங்கள் கற்றுத் தாருங்கள். நான் அதனைக் கற்றுக்கொள்ள தயாராக உள்ளனே;. இவ் மாநகரத்தில் ஏதாவது ஒரு செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு நான் முயன்றால் அதனை தாபன  விதிகளுக்கு ஏற்றவகையில் எவ்வாறு செய்யலாம் என்று கூறுகின்ற அரச அதிகாரிகளாக நீங்கள் இருக்க வேண்டுமே தவிர அச் செயற்பாட்டினை செய்யவே முடியாது என்று முற்றாக மறுக்கின்ற அரச அதிகாரிகளாக இருக்க வேண்டாம் என்றார். 

அத்துடன், குறித்த விடயம் உங்களுக்கு சட்டசிக்கல்களை ஏற்படுத்தும் தெரிந்தும் நான் உங்களை சட்டசிக்கல்களுக்குள் தள்ளமாட்டேன். அவ்வாறு ஏதவாது பிரச்சனை வந்தால் உங்களுக்காக நான் ஒரு சட்டத்தரணியாக உங்களைப் பாதுகாப்பேன். அத்துடன் நான் முதல்வராக இருக்க போகின்ற இந்த ஒரு வருடம் மட்டும் மின்றி நான் முதல்வராக இல்லாத காலத்திலும் உங்களுக்காக உங்களை பாதுகாக்க நீதிமன்றம் வருவேன். உங்களைப் பாதுகாப்பேன் என்ற உத்தர வாத்தினை இங்கு ஒரு சட்டத்தரணியாக வழங்குகின்றேன் என்றார்.

சபைக்கு வருமானம் தரும் வழிமூலங்களை தடுக்காதீர்கள் ஆனால் செலவுகளை கட்டுப்படுத்துங்கள். நீங்கள் செய்கின்ற சேவைகள் மக்கள் சேவைகளாக மக்களைச் சென்றடைந்தால் அது பிழையும் அல்ல அதனால் எந்த பிரச்சனைகளும் உங்களுக்கு வரப்போவதில்லை. ஆனால் அது உங்களது உங்களது சட்டப்பைகளை நிரப்பினாலே அது பிழை. பிரச்சனையான விடயம். என்றார்.

மாநகரத்திற்கு வரும் மக்களுக்கு வீண்சிரமங்களையும் அலச்சல்களையும் ஏற்படுத்தாதீர்கள். இன்று இங்கு இருக்கின்ற நீங்கள் உங்களுடைய ஒரு தேவைகளுக்காக வேறு திணைக்களங்களுக்கு செல்லும் போது அங்கு இருக்கும் அதிகாரிகள் உங்களுக்கு வீண்சிரமங்களைத் தந்தால் உங்களுக்கு ஏற்படும் சலிப்பே எம்மைத்தேடி வரும் மக்களுக்கும் ஏற்படும். ஆக. சோலை வரியாக இருக்கட்டும், தண்ணீர் இணைப்பாக இருக்கட்டும். அல்லது கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியாக இருக்கட்டும் அதற்குரிய விண்ணப்பப்படிவங்களைப் பெற வரும் மக்களுக்கு அவ் விண்ணப்பப்படிவங்களுடன் தேவையான ஆவண்ங்கள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான ஒரு துண்டு பிரசுரத்தையும் வழங்குங்கள் என்றார்.

என்ன செய்தாலும் சிலர் குறைகூறிக்கொண்டே இருப்பார்கள் ஆக அதனைக் கவனத்தில் எடுக்காது நாங்கள் எங்கள் பக்கம் சரியானதைச் செய்வோம். மக்களுக்கு சேவையாற்றுவோம். நான் முதல்வராக இருக்க போகின்ற இந்த ஒரு வருடத்தில் மக்களுக்கு ஏதாவது செய்து விட்டு போவேண்டும் என்று நினைக்கின்றேன். அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பு வேண்டும். அதனை உங்களிடம் வேண்டுகின்றேன். என்றார்.

இக் கலந்துiயாடலில் கலந்து கொண்டு மாநகர சபை ஆணையாளர் மற்றும் மாநகரசபை செயலாளர் ஆகியோர் கிளைத்தலைவர்களுக்க பல்வேறுபட்ட ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்கினார்கள்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post