உங்கள் மகனை விடுதலை செய்துவிட்டேன் என ஜெயலலிதா கையை பிடித்து தெரிவித்து ஏழு வருடங்களாகிவிட்டன- அற்புதம்மாள்.
உங்கள் மகனை விடுதலை செய்துவிட்டேன் என ஜெயலலிதா கையை பிடித்து தெரிவித்து ஏழு வருடங்களாகிவிட்டன என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் டுவிட்டரில் உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
நீதியை கொன்று ஒரு நிரபராதியை உயிரோடு புதைக்கும் காலத்தில் கழியும் ஒவ்வொரு நாளும் ஒரு யுகமே’’ என்று வேதனை தெரிவித்திருக்கிறார் அற்புதம்மாள்.
“உங்கள் மகனை விடுதலை செய்துவிட்டேன்: கலங்காதீர்கள்” என எனது கைகளை பற்றி உறுதியளித்து இன்றுடன் 7 ஆண்டுகள் முடிந்தது என்று சொல்லும்போதும், இன்னும் எத்தனை யுகங்கள் போராடுவதுஎன மனதை வருத்தும் கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்
Post a Comment