வட கிழக்கில் தொடரும் நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்றிணைவது காலத்தின் தேவை - Yarl Voice வட கிழக்கில் தொடரும் நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்றிணைவது காலத்தின் தேவை - Yarl Voice

வட கிழக்கில் தொடரும் நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்றிணைவது காலத்தின் தேவை




இலங்கையின் முப்படைகளிற்கென வடகிழக்கில் தொடரும் நில ஆக்கிரமிப்பு தொடர்பில் தமிழ் தலைவர்களும் கட்சிகளும் கையாலாகாத தரப்புக்களாக இருப்பதாக குற்றஞ்சுமத்தியுள்ளார் வலி.வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவராக ச.சஜீவன்.

காரைநகர் இந்து கல்லூரிக்கு உரித்தான 8 பரப்பு காணியை எலறா கடற்படை தளம் அமைப்பதற்கு நில அளவை திணைக்களகத்தால் அளவீடு செய்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

காரைநகர் இந்துமகா வித்தியாலயத்துக்குச் சொந்தமான இந்தக் காணியை சுவீகரிப்பதற்கு எதிராக பிரதேச மக்களும், அரசியல் கட்சி பிரதிநிதிகளும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதையடுத்து முயற்சியை கைவிட்டு நில அளவீட்டு திணைக்களத்தினர் வெளியேறியிருந்தனர். 

இதன் தொடர்ச்சியாக யாழ்.ஊடக அமையத்தில் இன்று  புதன்கிழமை நடத்திய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த ச.சஜீவன் அடுத்துவரும் நாட்களில் மேலும் பல இடங்களில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஏதிர்வரும் 19ம் திகதி காரைநகரில் எலோரா கடற்படை தளத்திற்கென மேலும் 51ஏக்கர் காணி சுவீகரிக்கப்படவுள்ளது.67குடும்பங்களிற்கு சொந்தமான காணிகளை இலக்கு வைத்து அளவீடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதனை தொடர்ந்து பருத்தித்துறை கற்கோவளம்,கோட்டயம்புரம் என பல இடங்களில் கடற்படைக்கு காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளது.

ஆனால் இவ்வாறு காணிகள் சுவீகரிக்கப்பட ஏதுவாக நில அளவைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் வெறுமனே எமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி தலைவர்களும் கோவில் திருவிழாவிற்கு வருவது போல வருவதும் புகைப்படமெடுப்பதுடன் ஊடகங்களிற்கு பேட்டி கொடுப்பதுடன் எல்லாமும் முடிந்துவிட்டதாக செல்வதாகவும் உள்ளனர்.

உண்மையில் தமிழ் மக்களது காணிகள் சுவீகரிப்பு தொடர்பில் தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.
அதற்கு முதலில் தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் சர்வதேசத்தின் கவனத்தை ஈரக்கவேண்டும். 

இதற்கு அனைத்து தமிழ் கட்சிகளும் காணி ஆக்கிரமிப்பு தொடர்பில் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவை.

பொத்துவில் முதல் பொலிகண்டி பேரணியில் இணைய முடியுமெனில் காணி சுவீகரிப்பு தொடர்பிலும் இணையமுடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கேதுவாக முதலில் காணி சுவீகரிப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படுவது நிறுத்தப்படவேண்டுமெனவும் ச.சஜீவன் கேட்;டுக்கொண்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post