யாழ்ப்பாணம் தென்மராட்சி கிழக்கு பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல் - Yarl Voice யாழ்ப்பாணம் தென்மராட்சி கிழக்கு பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல் - Yarl Voice

யாழ்ப்பாணம் தென்மராட்சி கிழக்கு பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்




நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் இம்மாதம் நிறைவடையும் வரை எழுதுமட்டுவாழ் வடக்கு, தெற்கு, கரம்பகம், மிருசுவில் வடக்கு, தெற்கு, உசன், கொடிகாமம் தெற்கு, விடத்தற்பளை, கெற்பேலி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் மிக மிக அவதானமாக இருக்குமாறு கொடிகாமம் பொலிஸார் மற்றும் சுகாதாரபிரிவினர் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.

 மிருசுவிலில் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களுடன் தொடர்பில் உள்ள சிலரை தேடிக்கண்டறிந்து தனிமைப்படுத்தும் செயற்பாடு முற்றுப்பெறாமையால் சமூக மட்டத்தில் முதல்நிலைத் தொடர்பாளர்களிடையே அல்லது அதற்கடுத்த நிலைகளில் உருவாகியிருக்கக்கூடிய கொரோனா நோயாளர்கள் அல்லது காவிகள் சுதந்திரமாக நடமாடும் பேராபத்து தொடருகின்றது.

தற்போது முதல்நிலைத் தொடர்பாளர்கள் மாத்திரமே இலக்கு வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருவதுடன் இரண்டாம், மூன்றாம் நிலைத் தொடர்பாளர்கள் தனிமைப்படுத்தப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 எனவே அனைவரும் வீடுகளுக்குள் தங்கியிருக்கவும், அனைத்து நிகழ்வுகளையும் இம்மாதம் நிறைவடையும் வரை இரத்துச் செய்யவும், சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றவும் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது.

குறிப்பாக கொரோனா அறிகுறிகள் எவையும் இருப்பின் உடனடியாக சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையை தொடர்பு கொள்ளுமாறும் கொடிகாமம் பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post