அஜித், நயன்தாரா, நமீதா, பிரபு, சந்தானம், ரஹ்மான் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த படம் பில்லா.
இயக்குனர் விஷ்ணு வர்தன் இந்த படத்தை இயக்கி இருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.
தற்போது இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.
1978ம் ஆண்டு ஹிந்தியில் வெளியாகி பின்னர் 1980ம் ஆண்டு தமிழில் ரஜினி நடிப்பில் மறு ஆக்கம் செய்யப்பட்ட படம் பில்லா. இந்த படங்களின் மறு தொடக்கம் தான் அஜித்தின் நடிப்பில் வெளியான பில்லா. இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று அஜித்துக்கு வெற்றியை தேடி தந்தது.
நடிகர் அஜித் பில்லா படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். இதற்கு முன்னர் சில படங்களில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தாலும் பில்லா படத்தில் வில்லத்தனமான நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்தார். பில்லா படம் அஜித்தின் நடிப்பை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்ற படமும் கூட.
கடந்த டிசம்பர் 14ம் தேதியுடன் பில்லா படம் வெளியாகி 13 வருடம் நிறைவடைந்தது. வலிமை படத்தின் அப்டேட் இல்லாமல் தவித்து வந்த அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் 13YearsOfClassyDonBilla என்ற ஹாஸ்டாக்-ஐ ட்ரெண்டிங் செய்து கொண்டாடினர்
இதையடுத்து பில்லா படத்தை தமிழகத்தில் ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். வரும் மார்ச் 12ம் தேதி ரிலிஸ் செய்ய உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வலிமை ரிலீஸை எதிர்நோக்கி காத்துள்ள ரசிகர்களுக்கு இந்து செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Post a Comment