தமிழ் ஆர்வலர்களுக்கும் தமிழி அமைப்பிற்குமிடையில் கலந்துரையாடல் - Yarl Voice தமிழ் ஆர்வலர்களுக்கும் தமிழி அமைப்பிற்குமிடையில் கலந்துரையாடல் - Yarl Voice

தமிழ் ஆர்வலர்களுக்கும் தமிழி அமைப்பிற்குமிடையில் கலந்துரையாடல்



உலக தாய்மொழி தினம் அன்று தமிழி அமைப்பால் ஒழுங்குசெய்யப்பட்ட தமிழி அமைப்பிற்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் இடையான கலந்துரையாடல்  பொற்பதி அறிவாலயத்தில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வாழ்நாள் பேராசிரியர்.அருணாச்சலம் சண்முகதாஸ் மற்றும் திருமதி.மனோன்மணி சண்முகதாஸ் கலந்து கொண்டார்கள் அத்துடன் அதிதியாக யாழ் மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கலந்துகொண்டார்.

தமிழி அமைப்பிற்கும் தமிழ் ஆர்வலர்களுக்குமிடையான கலந்துரையாடலைத் தொடர்ந்து தமிழின் இருப்பை உறுதிசெய்யும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன் எடுத்துவரும் யாழ் மாநகர முதல்வர் தமிழி அமைப்பால் கௌரவிக்கப்பட்டார்.

 அத்துடன் இந் நிகழ்வில் “தமிழில் கையெழுத்திடுவோம்” என்ற தமிழி அமைப்பின் செயற்திட்டம் திருமதி. மனோன்மணி சண்முகதாஸ் அவர்களால் அங்குராட்பணம் செய்து வைக்கப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post