யாழ் போதனா வைத்தியசாலையின் புதிய நடைமுறைகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வைத்திய ஸ்ரீ பவானந்தராசா தெரிவித்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது...
வைத்தியசாலையில் வைத்திய நிபுனர் உட்ப்பட மூவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் எமது நிபுணர் குழுவைக் கூட்டி ஆராய்ந்ததன் அடிப்படையில் சில பிரிவுகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம்.
ஆயினும் தொடர்ந்து இவ்வாறு நடத்திச் செல்ல முடியாது, அதனால் தொடர்ந்து அனைத்துச் சேவைகளையும் நடாத்த நிபுணர்கள் குழுவுடன் இணைந்து இன்று ஆராய்ந்து சில தீர்மானங்களை எடுத்திருக்கின்றோம்.
இதற்கமைய எதிர்வரும் 5 ம் திகதி முதல் வைத்தியசாலையின் அனைத்து சேவைகளையும் மீள ஆரம்பிக்கவுள்ளோம். இதற்கு நோயாளிகள் பார்வையாளர்கள் அனைவரதும் ஒத்துழைப்பும் மிக மிக அவசியமாக இருக்கிறது.
இதேவேளை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் நோயாளர்களைப் பார்வையிடச் வருகின்ற பொதுமக்களில் ஒருவருக்கு மாத்திரமே பாஸ் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது இதுவரைகாலமும் அவரு நோயாளரை பார்வையிடுவதற்கு 2 பாஸ் வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் 1 ஆக குறைக்கப்பட்டுள்ளது ஆகையினால் இனிமேல் நோயாளரை பார்வையிட ஒருவர் மட்டுமே அனுமதிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும் வைத்தியசாலையில் வைத்தியர்கள் தாதியர்கள் சிற்றூழியர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் மற்றும் வைத்தியசாலைக்கு வருகின்ற பார்வையாளர்கள் அனைவரும் முகமூடி கட்டாயம் அணிய வேண்டும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் வைத்தியசாலையில் வைத்திய நிபுணர் உட்பட மூவருக்கு குணத்தோடு ஏற்பட்டுள்ள உள்ளதை அடுத்து அவர்களுக்கான அடுத்தகட்ட சிகிச்சை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு தொட்டு எவ்வாறு ஏற்படுகிறது என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்ட பணிப்பாளர் குறித்த வைத்தியர் சிகிச்சை வழங்கிய நோயாளிக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் நோயாளிக்கு ஊடகவே வைத்திருக்கும் தொட்டுப் பரவியிருக்கலாம் எனசந்தேகிப்பதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்
மேலும் யாழ் போதனா வைத்தியசாலையில் 86 வீதமான பணியாளர்களே தடுப்பூசியை முதற்கட்டமாக போட்டதாகவும் அடுத்த கட்டங்களிலும் தடுப்பூசி வழங்க இருப்பதாகவும் தெரிவித்தனர.
அண்மையில் வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள வைத்திய நிபுணர் தடுப்பூசி பெற்றிருந்தாலும் தடுப்பூசி ஏற்றப்பட்ட நாட்களுக்குள்ளேயே அவருக்கு தொற்றுற்ற உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அதே நேரத்தில் தடுப்பூசி போட்டால் 16 நாட்களுக்குப் பின்னரே அந்த தடுப்பூசி செயற்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் இது முதல் கட்ட தடுப்பூசி என்றும் அடுத்த கட்டங்களில் இரண்டாம் கட்டமாக தடுப்பதற்காகவே 100 விதமான பாதுகாப்பு ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.
யாழ் போதனா வைத்தியசாலையின் கீழ் இயங்கும் கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் தற்போதும் 72 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்படட பணிப்பாளர் குறித்த வைத்தியசாலையில் தென்னிலங்கையிலிருந்து நோயாளர்கள் அனுமதிக்கப்படுவது குறைவு என்றும் இங்கே அடையாளம் காணப்படுகின்ற தொற்றாளர்களேலே அதிகளவில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
Post a Comment