யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வரின் வாகனத்திற்கு, சபை சாரதி அல்லாமல் வேறு ஒரு சாரதியை நியமிப்பது தொடர்பாக இடம்பெற்ற வாக்கெடுப்பு 20 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றுள்ளது.
யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்பு இன்றையதினம் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மாநகர சபையின் முதல்வர் தான் தனிப்பட்ட வகையில் தனக்கு நம்பிக்கையான சாரதி ஒருவரை நியமிப்பது தொடர்பன பிரேரனை ஒன்றை சபையில் முன்வைத்திருந்தார்.
இந்த விடையம் தொடர்பில் இன்றைய சபை அமர்பில் நீண்ட நேர வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தது.
இறுதியில் இதனை வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கலாம் என உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு இடம்பெற்றது.
வாக்கெடுப்பில் 25 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 5 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்ளிக்க 10 உறுப்பினர்கள் நடுநிலை வகித்துள்ளனர்.
அத்தோடு 2 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத அதே வேளை 3 உறுப்பினர்கள் சபை அமர்பில் கலந்துகொள்ளவில்லை.
இதன் மூலம் 20 மேலதிக வாக்குகளால் குறித்த தீர்மாணம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் சபைக்கு சொந்தமான வாகனத்தினை பயன்படுத்தாமல் தனது சொந்த வாகனத்தை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.