நெடுதீவிலிருந்து கண்ணாடி இழைப்படகு மூலம் குறிகாட்டுவான் பகுதிக்கு கடலுணவுகளை எடுத்துச் சென்ற இரு இளைஞர்கள் இதுவரை கரை திரும்பாததால் நெடுந்தீவு மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகின்றது.
இன்று முற்பகல் 11 மணியளவில் கடலுணவுகளுடன் குறிகாட்டுவான் நோக்கிச் சென்ற இவர்கள் பிற்பகல் 1.30 மணிக்கு குறிகாட்டுவானிலிருந்து திரும்பியுள்ளதாக தெரியவருகின்றது.
ஆயினும் மாலை வரை கரை திரும்பாத நிலையில் அவர்கள் பயணித்த படகு நெடுந்தீவு கிழக்கு அந்தோனியார் கோவில் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதை அடுத்து நெடுந்தீவு மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்போது ஞானசிங்கம் றொபின்சன் (ரமேஸ்) (வயது-43), மரியவேதநாயகம் நெயன் (20) ஆகிய இளைஞர்களே காணாமல் போயுள்ளனர்.
இதனையடுத்து மீனவர்களில் பத்துக்கும் மேற்பட்ட படகுகள் காணாமல் போன இளைஞர்களை தேடி கடலில் இரவிரவாக தேடுதலில் ஈடுபட்டுள்ளதுடன் கடற்படையும் தேடுதலை மேற்கொண்டுள்ளது.
Post a Comment