அந்தமான் கடல்பகுதியில் பழுதடைந்த படகில் ஒருவாரகாலமாக தத்தளிக்கும் ரொகிங்யா அகதிகள் - பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் - Yarl Voice அந்தமான் கடல்பகுதியில் பழுதடைந்த படகில் ஒருவாரகாலமாக தத்தளிக்கும் ரொகிங்யா அகதிகள் - பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் - Yarl Voice

அந்தமான் கடல்பகுதியில் பழுதடைந்த படகில் ஒருவாரகாலமாக தத்தளிக்கும் ரொகிங்யா அகதிகள் - பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்



அந்தமான் கடல்பகுதியில் ஒரு வாரகாலமாக தத்தளி;த்துக் கொண்டிருக்கும் படகில்  உள்ள ரொகிங்யா அகதிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐநா அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது.

நடுக்கடலில் தத்தளிக்கும் அகதிகளின் எண்ணிக்கையோ அல்லது அவர்கள் இருக்கும் இடமோ தெரியவில்லை ஆனால் ஏற்கனவே பலர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் கிடைக்கின்றன என யுஎன்எச்சிஆர் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இறுதியாக அவர்களிடமிருந்து தாங்கள் ஆபத்திலிருக்கும் தகவல் கிடைத்தது என யுஎன்எச்சிஆர் தெரிவித்துள்ளது.

அவர்கள் எங்கு உள்ளனர் என்பது துல்லியமாக தெரியாததால் அந்தபகுதியில் உள்ள நாடுகளிற்கு இந்த தகவலை வழங்கியுள்ளதுடன் அவர்களுடைய மிக விரைவான செயற்பாட்டிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம் என  யுஎன்எச்சிஆர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட படகினை கண்டால் அகதிகளின் உயிர்களை காப்பாற்றுவதற்கும் பெருந்துயரை தடுப்பதற்குமான உடனடிநடவடிக்கையை எடுக்கவேண்டும் என  யுஎன்எச்சிஆர் அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அகதிகள் பங்களாதேசிலிருந்து பத்து நாட்களிற்கு முன்னர் புறப்பட்டுள்ளனர் அவர்களது படகின் இயந்திரம் பழுதடைந்துள்ளது என தகவல் கிடைத்துள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளது.

பலநாட்களாக உணவும் குடிநீரும் இல்லாத நிலையில் இருக்கின்றோம் பலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர் என இறுதியாக அகதிகள் தெரிவித்துள்ளனர் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post