பழ நெடுமாறனுக்கு ஆசி வேண்டி நல்லூரில் விசேட வழிபாடும் பிரார்த்தனையும் - Yarl Voice பழ நெடுமாறனுக்கு ஆசி வேண்டி நல்லூரில் விசேட வழிபாடும் பிரார்த்தனையும் - Yarl Voice

பழ நெடுமாறனுக்கு ஆசி வேண்டி நல்லூரில் விசேட வழிபாடும் பிரார்த்தனையும்




தமிழகத்தின் தமிழர் தேசிய முன்னனியின் தலைவர் பழ நெடுமாறனுக்கு ஆசி வேண்டி வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் விசேட பிரார்த்தனையும் வழிபாடும் இன்று நடைபெற்றது.

இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் இந்த வழிபாடுகள் இடம்பெற்றது.

இதன் போது தமிழகத்தில் சுகவீனமுற்றிருக்கின்ற பழ நெடுமாறனின் உடல் நலம் தேறவும் அவருக்கு ஆசி வேண்டியும் நல்லூர்க் கந்தன் ஆலயம் முன்பாக பஜனை இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த வழிபாடுகளில் வட மாகாண முன்னாள் அமைச்சரும் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவருமான அனந்தி சசிதரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




0/Post a Comment/Comments

Previous Post Next Post