இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் வற்றாப்பளை கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட கொண்டைமடு விவசாய கிராமத்திற்கு விவசாயிகளின் கோரிக்கைக்கு அமைவாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,யாழ் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், பிரதேச சபை உறுப்பினர்கள், கமநல திணைக்கள உத்தியோகத்தர்கள், கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் என பலரும் இச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இப் பகுதி விவசாயிகள் நீண்டகாலமாக எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் உடனடியாக சம்மந்தப்பட்ட திணைக்களத்தினருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
வெகு விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்தனர்.
இதுவரை தமது கிராமத்திற்கு எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் வருகைதரவில்லை என்றும் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடாத்தும் எமக்கு உங்கள் இருவரின் வருகை மிகுந்த சந்தோஷத்தை தருவதுடன் இருவருக்கும் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர் .
Post a Comment