யாழ்ப்பாண கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி அங்குரார்பணம் - Yarl Voice யாழ்ப்பாண கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி அங்குரார்பணம் - Yarl Voice

யாழ்ப்பாண கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி அங்குரார்பணம்




யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கம் நடாத்தும் 2021 ஆம் ஆண்டிற்க்கான (JVL )Jaffna volleyball league அங்குரார்ப்பண நிகழ்வு யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்க தலைவர்  அ.ரவிவர்மன்
தலைமையில் இன்றய தினம்  அரியாலை தனியார் விடுதியில் நடைபெற்றது!

9 அணிகள்  இப்போட்டியில்  பங்குபெறுக்கோள்கின்றன!
அரியாலை கில்லாடிகள் நூறு,ஆவரங்கால் கிங்ஸ் பைடர்ஸ், மட்டுவில் ஸ்பைக்கர்ஸ், அச்சுவேலி சென்டர் ஸ்பைக்கேர்ஸ், ஸ்புட்னிக் நோர்த் போல்ஸ், ரைசிங் ஜஸ்லான்ட், வல்வையூர் வொலி வோரியஸ்,சங்கானை மக்கள் ஒன்றியசேலஞ்சர்ஸ், நீர்வேலி பசங்க,

ஆகிய ஒன்பது அணிகள் பங்குபெறும் இப் போட்டியானது யாழ்மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் கீழ் இருக்கின்ற கழக அணி வீரர்களை ஏலம் அடிப்படையில் மாசி மாதம் 28 ம் திகதி தெரிவு செய்யப்பட்டு சித்திரை மாதம் 1 திகதி  சுற்றுப்போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது!

இந்நிகழ்வில் தேசிய வலைப்பந்தாட்ட வீராங்கனை செல்வி தர்ஜினி சிவலிங்கம்,தியாகி அறக்கொடை நிதியத்தின் நிறுவுனர் வா,தியாகேந்திரன், அணி உரிமையாளர்கள், கரப்பந்தாட்ட சங்க உறுப்பினர்கள், விளையாட்டு வீரர்கள் என பலர் கலந்து கொண்டனர்!

0/Post a Comment/Comments

Previous Post Next Post