தென்மராட்சி சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று மதியம் சாவகச்சேரி ஐயா கடையடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சாவகச்சேரியிலிருந்து கொடிகாமம் நோக்கிச் சென்ற ஹயஸ் வானும் கொடிகாமத்திலிருந்து சாவகச்சேரி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
இதில் நெல்லியடியை சேர்ந்த ஜெகன் அன்ரனி சியாம் வயது - 20 என்பவர் உயிரிழந்துள்ளதுடன் பருத்தித்துறை கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த ச.சுதர்சன் வயது 24 என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment