நாங்கள் யுத்த குற்றவாளிகள் இல்லை,நான் எனது தேசத்திற்கும் மக்களி;ற்கும் எனது சேவையை செய்துள்ளேன் என பாதுகாப்பு செயலாளர் கமால்குணரட்ண தெரிவித்துள்ளார்.
நான் எனது இளமை முழுவதையும் பயங்கரவாதிகளிற்கு எதிரான போராட்டத்தில் காடுகளில் செலவிட்டதன் காரணமாகவே உங்களால் இன்று சுதந்திரமாக நடமாட முடிகின்றது என தெரிவித்துள்ள கமால் குணரட்ண என்னை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கவேண்டியது அரசாங்கத்தினதும் வெளிவிவகார அமைச்சினதும் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்
.
நான் எதனை பார்த்தும் அஞ்சவில்லை நான் யுத்த குற்றவாளியல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை குறித்து நான் கருத்து தெரிவிக்கவேண்டும் என்றால் அது முற்றிலும் nonsense
நான் முழு அர்த்தத்துடனேயே தெரிவிக்கின்றேன் . என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.
இதனை விட அதனை வர்ணிப்பதற்கு வேறு வார்த்தைகள் இல்லை என தெரிவித்துள்ள கமால்குணரட்ன அந்த அறிக்கையில் காணப்படும் விடயஙகளை அவர்கள் எங்கிருந்து பெற்றார்கள் அவர்கள் எதனடிப்படையில் அந்த முடிவிற்கு வந்துள்ளார்கள் என்பது தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனது பெயரும் அறிக்கையில் உள்ளதால் நான் இது குறித்து மேலும் கருத்து கூறவிரும்பவில்லை ஆனால் என்னை பொறுத்தவரை அறிக்கை மிகவும் பரிதாபகரமானது, நான் என்ன தெரிவிக்க விரும்புகின்றேன் என்றால் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையும் அதன் ஆணையாளரும் கௌரவமிக்கவர்களாக காணப்படவேண்டும்,அவர்கள் ஒரு விடயம் குறித்து கருத்து தெரிவிக்கும்போது அது கௌரவமானதாக காணப்படவேண்டும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பினரையும் அவர்கள் செவிமடுக்கவேண்டும்,சிலரை மாத்திரம் செவிமடுத்துவிட்டு அதனை உலகிற்கு வெளியிடுவது - இதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டதாக நான் கருதவில்லை எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Post a Comment