வடக்கில் சீனாவை காலூன்ற வைக்க இலங்கை அரசாங்கம் கடும் முயற்சி - இந்தியாவும் புரிந்து கொள்ள வேண்டுமென சுரேஸ் சுட்டிக்காட்டு - Yarl Voice வடக்கில் சீனாவை காலூன்ற வைக்க இலங்கை அரசாங்கம் கடும் முயற்சி - இந்தியாவும் புரிந்து கொள்ள வேண்டுமென சுரேஸ் சுட்டிக்காட்டு - Yarl Voice

வடக்கில் சீனாவை காலூன்ற வைக்க இலங்கை அரசாங்கம் கடும் முயற்சி - இந்தியாவும் புரிந்து கொள்ள வேண்டுமென சுரேஸ் சுட்டிக்காட்டு



வடக்கிலுள்ள காணிகளை அபகரித்து தென்னிலங்கைக்கும் சீனாவிற்கும் வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் இதனை இந்தியாவும் புரிந்து கொள்ள வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்


யாழ் ஊடக அமையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது... 

காணி சீர்த்திருத்த ஆணைக் குழுவின் கட்டுப்பாட்டுக்குள் முக்கியமாக பளைப் பிரதேசத்தில் ஏறத்தாள மூவாயிரம் ஏக்கர் காணிகள் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குள் சிக்கியிருக்கின்றன. 

இந்த காணி சீர் திருத்த குழுவிடம் இருக்கும் காணிகளை சீனக் கம்பனிக்கு அதனை விட முக்கியமாக கொழும்பில் இருக்கக்கூடிய பாரிய வர்த்தகர்களுக்கு அந்தக் காணிகளை கொடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிராந்திய கிளையை யாழ்ப்பாணத்தில் இருந்து அநுராதபுரத்திற்கு மாற்றுவதற்குரிய முழுவேலைகளும் நடந்து முடிந்திருக்கின்றன. 

ஆகவே யாழ்ப்பாணத்தில் இருந்த பிராந்தியக் கிளை என்பது அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டு அந்தப் பிராந்திய நிலையத்திற்கு பொறுப்பாளர்களாக இரண்டு இராணுவத்தளபதிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். 

ஆகவே ஒரு விடையத்தை நாங்கள் மிகவும் தெளிவாகப் பார்க்க வேண்டும் வடக்கு கிழக்கிலுள்ள காணிகளை எவ்வளவு மறைமுகமாக மக்களுக்கு தெரியாத வகையில் பயிரிடக்கூடிய காணிகளை எவ்வளவு இரகசியமாக அரசாங்கம் கொள்முதல் செய்கின்றது.

இந்த நாட்டின் மூவாயிரம் ஏக்கர் காணிகளை பிரமர் பண்டாரநாயக்கா பிரதமராக இருந்த காலத்தில் காணிச்சீர்திருத்ததை கொண்டு வந்து தமிழ் மக்களிடம் உள்ள காணிகளை அரசாங்கம் தங்கள் வசமாக்கியது அந்தக் காணிகள் தான் இப்பொழுது எங்களின் கைகளை விட்டு போக இருக்கிறது.

 யாழ்ப்பாணத்திலே அல்லது வடக்கிலே நூற்றுக் கணக்ககான ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருக்கும் போது இந்தக் காணிகளை ஐந்து ஏக்கராக அல்லது பத்து ஏக்கராக பிரித்து இளைஞர்களுக்கு கொடுப்பதால் அவர்கள் நிச்சயமாக சொந்த வருமானத்தை ஈட்டிக்கொள்ளமுடியும் அவர்கள் சொந்தக் காலில் நிற்கமுடியும்.

அவ்வாறான ஒரு நிலையை ஏற்படுத்துவதை விடுத்து கொழும்பில் இருக்கக்கூடிய முதலாலிகளக்கு இந்தக் காணிகளை கொடுப்பதற்காக இதனுர்ய பிராந்திய அலுவலகத்தையே அநுராதபுரத்திற்கு மாற்று ஏற்புடைய விடையம் அல்ல.

 ஏற்கனவே வடக்கு மாகாணத்திற்கு பல்வேறு பட்ட பிரச்சினைகள் இருக்கத்தக்கதாக இப்போது பளைப்பிரதேசத்தில் நூற்றுக்க ணக்கான பிரசேத்தை சீனக் கம்பனிக்கு கொடுக்கப்போதாகவும் இருக்கின்றது சிங்கள அரசாங்கம் என்ன நினைத்திருக்கின்றது.

 ஒரு பக்கம் தமிழ் மக்களின் காணிகளை பறிமுதல் செய்து சீனக்காரர்களுக்கு கொடுப்பதும் தமிழ் மக்களின் காணிகளை பறிமுதல் செய்து கொழுமிலுள்ள முதலாலிகளுக்கு கொடுப்பதும் பளையில் புதுக்காட்டில் தேசிய காணி அபிவிருத்தி சபை என்பதற்கு 287 ஏக்கர் தென்னந்தோட்டம் இருக்கின்றது அதனையும் சிங்கள முதலாளிகளுக்கு கொடுக்கும் திட்டம் இருக்கின்றது தமிழ் முதலாலிகள் கேட்டபோதும் கூட அவை கொடுக்கப்படவில்லை

நாங்கள் ஒரு புறத்தில் இருந்து தமிழ் மக்களுக்கு தீர்வைத் தேடுகின்றோம் அரசாங்கம் அபிவிருத்திக்காக இருக்கும் காணிகளை கொள்வனவு செய்து அதனை சிங்களத்தரப்புக்கு கொடுக்ககூடியதாக இருக்கின்றது ஆகவே தமிழ் அரசியல் கட்சிகளும் சரி சிங்களக் கட்சிகளும் சரி அரசாங்கத்கதின் இவ்வாறான போக்கை கண்டு கொள்ளாதிருப்பது வேதனைக்குரிய விடையமாகுமு்.

முக்கியமாக இந்த பிராந்திய அலுவலத்தை அநுராதபுதத்திற்கு மாற்றும் செயற்பாடு உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டும் எங்களுக்கான பிராந்திய நிலையம் என்பது எங்கள் பிரதேசத்தில் தான் இருக்கவேண்டும் வேறு பிராத்தியத்துக்கு மாற்றுவது கண்டிக்கத்தக்கது.

 ஆகவே அந்த பிராந்திய அலுவலகம் வேறு பிரதேசத்திற்கு மாற்ப்படுவது நிறுத்தப்பட வேண்டும். சீனக்கம்பனிக்கோ அல்லது வேறு எந்த கம்பனிக்கு வழங்குவது நிறுத்தப்படவேண்டும் ஏற்பனவே காணி கேட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் அப்பிளிக்கேசன் கொடுத்துள்ளார்கள். இது சிங்களவர்களுக்கு கொடுக்கநினைப்பது ஏற்புடையதல்ல.

ஆகவே தமிழ் க்கள் கவனமாக இருக்க வேண்டும் மண்ணை கபளீகரம் செய்ய நினைப்பதை தடுக்கவேண்டும் இந்த விடையத்தில் தமிழர் தரப்புக்கள் எங்கள் மண்ணைப் பாதுகாக்க வேண்டும் இந்த விடையத்தை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் தமிழ் மக்களின் நிலங்களையும் வளங்களையும் தென்னிலங்கை க்கும் அபகரித்து கொடுக்கிற வேலையை செய்கிற அரசாங்கம் மறுபக்கத்தில் அதனை சீனாவிற்கும் பறித்து கொடுக்கிற நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றது.

இவ்வாறு சீனாவிற்கு இலங்கையை தாரைவார்த்து இந்தியாவை பகைக்கின்ற வேலையையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது. இது இன்று மட்டுமல்ல இந்திய சீனா மற்றும் இந்தியா பாகிஸ்தான் போர்களின் போது கூட இலங்கை அரசு இந்தியாவிற்கு சார்பாக இருக்கவில்லை. 

இதனை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் நட்பாக தமிழர் தீர்ப்பே இருக்கின்றது. இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்ற இலங்கை அரசின் செயற்பாடுகளை தமிழர் தரப்பு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. ஆகையினால் இதனை இந்தியாவும் புரிந்து கொண்டு தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post