"ஜ றோட்" திட்டத்தை துரிதப்படுத்துவது தொடர்பில் முதல்வர் ஆராய்வு - Yarl Voice "ஜ றோட்" திட்டத்தை துரிதப்படுத்துவது தொடர்பில் முதல்வர் ஆராய்வு - Yarl Voice

"ஜ றோட்" திட்டத்தை துரிதப்படுத்துவது தொடர்பில் முதல்வர் ஆராய்வு



"I Road" திட்டம் தொடர்பான மீளாய்வுக்கு கூட்டம் யாழ்.மாநகர முதல்வருக்கும் "I Road" திட்ட பொறியாளர்கள் மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்றது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை குடிநீர் இணைப்பு வேலைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற நிலையில் ஐ சுழயன திட்டத்தினுள் உள்ளவாங்கப்பட்ட வீதிகளில் நீர் இணைப்பு வேலைகள் பூர்;த்தி செய்யப்பட்ட பின்னரே குறித்த வீதிகளை புனரமைப்பதற்குரிய வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க முடியும் என்ற நிலை காணப்பட்டதன் அடிப்படையில் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் குறித்த தரப்புக்களை ஓன்றாக அழைத்து கலந்துரையாடினார்.

"I Road" திட்டத்தில் மாநகரத்தில் உள்வாங்கப்பட்ட 17 வீதிகளில் குறைந்தது மூன்று வீதிகளை சமநேரத்தில் புனரமைப்பதற்குரிய வகையில் வேலைத்திட்டங்களை முன்னகர்த்துமாறும் அதற்கு ஏற்றாற் போல் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை குடிநீருக்கான குழாய்கள் பொருத்தும் பணியினை விரைவாக செய்துதருமாறும் கோரிக்கை விடுத்தார்.

குடிநீருக்கான குழாய்கள் கையிருப்பு இல்லாத காரணத்தினாலும் புதிய குழாய்கள் வருவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவும் பணிகள் சற்று தடங்கல் அடைந்ததாகவும் தற்போது குழாய்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஆறு மாத காலத்தினுள் குறித்த வீதிகளில் தமது பணிகளினை பூர்த்தி செய்ய முடியும் என்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினாரால் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் "I Road" திட்ட பொறியிலாளர் தாங்களும் தங்களுடைய பணிகளினை விரைவுபடுத்துவதாகவும் தெரிவித்தனர்.

குறித்த திட்டத்தின் செய்ற்றிட்ட முன்னேற்றம் தொடர்பாக இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை யாழ்.மாநகர சபை "I Road" திட்ட பொறியிலாளர்கள், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை என்பன இணைந்து ககலந்துரையாடுவோம் என்று மாநகர முதல்வர் கேட்டுக்கொண்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post